“மேலும் 25 பேருக்கு கொரோனா!”.. 15 பேர் பலி!.. பாதிக்கப்பட்டோர் 1267 ஆக உயர்வு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளது. தவிர அரசு மருத்துவர்கள் 6 பேர், தனியார் மருத்துவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதமானது 1.1 % ஆக இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடையே அறிவித்துள்ளார்.
Tags : #CORONA #CORONAVIRUS #VIJAYABASKAR
