'கடைசில எங்களையும் விட்டு வைக்கல'...'கொரோனாவின் கோரத்திற்கு இரையான சிறுவன்'...இனமே அழியும் ஆபத்து!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 11, 2020 03:57 PM

அமேசான் காட்டில் வசிக்கும் யானோமாமி பூர்வகுடி இன சிறுவன், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Yanomami Indigenous teen boy with Coronavirus dies in Brazil

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமேசான் காடுகளுக்கும் நுழைந்துவிட்டது. பிரேசிலில் சுமார் 300 பூர்வகுடி சமூகங்களைச் சேர்ந்த எட்டு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு வெளியுலக தொடர்பு ஏதுமில்லாமல் காட்டின் ஆழமான பகுதிகளில் இவர்கள்  வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொகாமா என்ற பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தசூழ்நிலையில் யானோமாமி என்ற சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து ரோரைமா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சிறுவனின் உயிரிழப்பை தொடர்ந்து யானோமாமி பழங்குடியின மக்களை பாதுகாக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

வெளி மனித தொடர்பு இல்லாமல் வசிக்கும் அமேசான் பழங்குடி மக்களை எப்படி கொரோனா தாக்கியது என்பது பெரும் கேள்வியாக உள்ளது. தற்போது பூர்வகுடிகளில் உள்ள ஏழு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.