'20 வருடங்களில்' இல்லாத அளவுக்கு... திடீரென 'துப்பாக்கிகளை' வாங்கிக்குவித்த அமெரிக்கர்கள்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 03, 2020 03:29 PM

கொரோனா உயிரிழப்புகளுக்கு மத்தியில் அமெரிக்கர்கள் துப்பாக்கிகளை வாங்கிக்குவிக்க ஆரம்பித்து இருப்பது தான் தற்போதைய ஹாட் நியூஸ்.

Americans purchased more than 2 million guns in March Month

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தான் அதிகம் பேரை பாதித்திருக்கிறது. தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் அதிபர் டிரம்ப் தற்போது இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அவர் சீனாவை குற்றஞ்சாட்டி வருவதாலும், சீனா அதற்கு பதிலடி கொடுத்து வருவதாலும் உலக அரங்கில் அமெரிக்கா-சீனாவின் இந்த வார்த்தை போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்கர்கள் தற்போது துப்பாக்கிகளை வாங்கிக்குவிக்கும் விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரையில் அங்கு துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதமான காரியமில்லை. அதனால் தனிநபர்கள் தங்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வைத்திருப்பர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 20 லட்சம் துப்பாக்கிகள் அமெரிக்காவில் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் துப்பாக்கி விற்பனை உச்சத்தை தொட்டதாக எப்.பி.ஐ(FBI) அமைப்பு தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவலால் அச்சத்துக்கு உள்ளாகி இருக்கும் அம்மக்கள் உணவுப்பொருட்கள், டாய்லெட் பேப்பர் ஆகியவற்றுடன் சேர்த்து கைத்துப்பாக்கிகளையும் அதிகளவில் வாங்கி இருக்கின்றனர். எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையால் மக்கள் துப்பாக்கிகளை தங்களின் பாதுகாப்புக்காக வாங்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த துப்பாக்கி விற்பனை அமெரிக்க மக்களை சற்று அச்சம் அடைய செய்திருப்பதாக கூறப்படுகிறது.