இப்படியா பண்றது?.. சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு.. நாசாவின் மெகா திட்டம்.. மஸ்க் பகிர்ந்த மீம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் நம்பர் 1 பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீம் பலரையும் ஈர்த்திருக்கிறது.

எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

டார்ட் மிஷன்
டிடிமோஸ் எனும் இரட்டை சிறுகோள்கள் அமைப்பை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு செய்துவருகிறது. டிடிமோஸ் என்னும் சிறுகோள் 780 மீட்டர் விட்டம் கொண்டது. இதற்கு அருகே அமைந்துள்ள டிமார்போஸ் 160 மீட்டர் விட்டம் உடையது. முன்னும் பின்னுமாக இவற்றின் இயக்கம் இருப்பதால் டிமார்போஸ்-ன் சுற்றுவட்ட பாதையை மாற்றியமைக்க திட்டமிட்டது நாசா. இதற்காகவே பிரத்தேயகமாக DART எனும் விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் மூலமாக டிமார்போஸ் சிறுகோளை கடந்த 26 ஆம் தேதி தாக்கியது நாசா. இதன்மூலம், டிமார்போஸ்-ன் சுற்றுவட்ட பாதை மாற்றியமைக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மீம்
இந்நிலையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஆஸ்கார் மேடையில் நடிகர் வில் ஸ்மித், தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக்கை தாக்கியதை, டார்ட் விண்கலம் டிமார்போஸ் சிறுகோளை தாக்கியதுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த மீம் பலராலும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
— Elon Musk (@elonmusk) September 27, 2022







