"இது தான் மனித குலத்துக்கே ஆபத்தா இருக்கப் போகுது".. பரபரப்பு எச்சரிக்கை கொடுத்த எலான் மஸ்க்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 26, 2022 06:13 PM

அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், உலக அளவில் நம்பர் 1 கோடீஸ்வரர் ஆவார்.

Elon musk about biggest risk to civilization is population collapse

Also Read | வற்றிய நீர்.. துருபிடித்து கிடந்த 'பேரல்'.. உள்ள என்ன தான் இருக்குன்னு பாத்தப்போ செம ஷாக்.. விசாரணையில் போலீஸ்.. 50 வருச மர்மம்!!

இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். உலகளவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது.

உலகளவில் முன்னணி தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரராக இருந்தாலும், எப்போதும் ட்விட்டர் பக்கத்திலும் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் எலான் மஸ்க்.

நெட்டிசன்கள் கேட்கும் ஆக்கபூர்வமான கேள்விகளுக்கு பதிலளிப்பது, மீம்ஸ்களை பகிர்வது, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிப்பது என ட்விட்டரிலும் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் எலான் மஸ்க். அவரது தொழில் மற்றும் ட்விட்டர் பதிவுகள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது ஏராளமான செய்திகள் இணையத்தில் வைரலாகும்.

Elon musk about biggest risk to civilization is population collapse

இந்நிலையில், தற்போது மனித குலத்திற்கே ஆபத்தாக முடியக் கூடிய விஷயம் தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க்.

உலகம் முழுக்க இன்று காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் ஏற்பட்டு வருவதால், நாம் நினைத்ததை விட அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல், ஆண்டு தோறும் பல நாடுகளில் இயற்கை பேரிடர்கள் அரங்கேறி வருவதும், மக்கள் மத்தியில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இனிவரும் ஆண்டுகள் என்பது அனைத்து நாடுகளில் எப்படி இருக்கும் என்ற பயமும் உருவாகி உள்ளது.

Elon musk about biggest risk to civilization is population collapse

அப்படி இருக்கையில், கால மாற்றத்தை விட குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக, மக்கள் தொகை குறைவது தான் இந்த மனித குலத்திற்கு ஆபத்தான ஒன்று என தனது ட்வீட்டில் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். அதே போல, உலக வெப்பமயமாதல் என்பதும் மிகப் பெரிய ரிஸ்க் தான் என்றும், ஆனால் நான் சொல்வதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி, எச்சரிக்கை ஒன்றையும் எலான் மஸ்க் விடுத்துள்ளார்.

மக்கள் தொகை குறைவு என்பது தான், காலநிலை மாற்றத்தை விட, உலக மக்களுக்கு பெரிய ஆபத்தாக இருக்க போகிறது என்ற எலான் மஸ்க் ட்வீட் பற்றி, நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, இதற்கு முன்பே குறைந்த பிறப்பு விகிதம் தொடர்பாக எலான் மஸ்க் நிறைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 3 நிமிசத்துல 20 தடவ கேட்ட துப்பாக்கி சத்தம்.. சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடி இளம்பெண் போட்ட 'பேஸ்புக்' பதிவு.. திகிலில் உறைய வைக்கும் பின்னணி!!

Tags : #ELON MUSK #ELON MUSK ABOUT BIGGEST RISK TO CIVILIZATION #POPULATION #எலான் மஸ்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon musk about biggest risk to civilization is population collapse | World News.