விண்வெளியில் இன்னும் 3 நாள்ல நாசா செய்ய இருக்கும் சம்பவம்.. வரலாற்றுலயே இதான் ஃபர்ஸ்ட் டைம்.. LIVE ஆ பாக்கலாமாம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வரும் செப்டெம்பர் 26 ஆம் தேதி சிறுகோள் ஒன்றின் மீது விண்கலத்தை மோதச்செய்ய உள்ளது. இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என நாசா அறிவித்திருக்கிறது. இந்த சம்பவத்தை காண பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
![DART asteroid smashing mission telecast in live says nasa DART asteroid smashing mission telecast in live says nasa](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/dart-asteroid-smashing-mission-telecast-in-live-says-nasa.png)
Also Read | "அவன் மீண்டு வரணும்..அதுபோதும்".. மகனுடைய சிகிச்சைக்காக தந்தை எடுத்த நெகிழ வைக்கும் முடிவு..!
இரட்டை சிறுகோள்கள்
சூரிய மண்டலத்தில் கோள்களை போலவே, பல சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவையும் அமைந்து உள்ளன. அவற்றில் ஒன்றுதான் டிடிமோஸ் எனும் இரட்டை சிறுகோள்கள் அமைப்பு. டிடிமோஸ் என்னும் சிறுகோள் 780 மீட்டர் விட்டம் கொண்டது. இதற்கு அருகே அமைந்துள்ள டிமார்போஸ் 160 மீட்டர் விட்டம் உடையது. இந்த டிமார்போஸ், தனக்கு அருகில் உள்ள டிடிமோஸை சுற்றி வருகிறது.
இந்த விண்கல் அமைப்பு 1996 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி கண்காணிப்பு திட்டத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஜோ மொன்டானி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அது துவங்கி இந்த சிறுகோளை நாசா ஆய்வு செய்துவருகிறது. இதில் சிரமத்தை ஏற்படுத்துவது இந்த இரண்டு சிறுகோள்களும் அமைந்திருக்கும் இடம் தான். பூமி, சூரியனை சுற்றுவதை விட குறைவான வேகத்தில் டிமார்போஸ், தனக்கு அருகில் உள்ள டிடிமோஸை சுற்றி வருகிறது.
மோதல்
முன்னும் பின்னுமாக இவற்றின் இயக்கம் இருப்பதால் டிமார்போஸ்-ன் சுற்றுவட்ட பாதையை மாற்றியமைக்க திட்டமிட்டது நாசா. இதற்காகவே பிரத்தேயகமாக DART எனும் விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டது. இதன் முக்கிய பணியே டிமார்போஸ் சிறுகோளை தாக்குவது தான். மணிக்கு 24,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து டிமார்போஸ்-ஐ இந்த விண்கலம் தாக்கும். இதனால், சிறுகோளின் சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
நேரலை
இந்நிலையில், டிமார்போஸ் சிறுகோளை DART விண்கலம் தாக்கும் நிகழ்வை மக்கள் நேரலையாக காணலாம் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா அறிவித்திருக்கிறது. செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த நேரலை துவங்கும். 7.14 மணிக்கு இந்த மோதல் நிகழும் என நாசா தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு சிறுகோளை விண்கலம் கொண்டு தாக்கும் முதல் நிகழ்வை பார்க்க மக்களிடையே பெரும் ஆர்வம் எழுந்திருக்கிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)