பூமியை நெருங்கும் 110 அடி அகலமுள்ள விண்கல்.. அது ஒன்னு மட்டும் நடக்காம இருக்கணும்.. நாசா வெளியிட்ட பரபர அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த மாத இறுதியில் 5 விண்கற்கள் பூமியை கடக்க இருக்கின்றன. இதனால் பாதிப்பு ஏற்படாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
விண்கல்
விண்வெளியில் சூரியனை பிற கோள்கள், சூரியனை சுற்றிவருவதை போலவே விண்கற்களும் விண்வெளியில் பல்லாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து வருகின்றன. இவை சில சமயங்களில் புவியின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டு புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதுண்டு. அப்படி பூமியின் வளமண்டலத்திற்குள் நுழையும் விண்கற்கள் காற்றில் அதிவேகத்துடன் உராய்வதால் தீப்பிடித்து வானிலேயே சாம்பலாகி விடுவதுண்டு.
ஆனால், அவற்றிலிருந்து தப்பி பூமிப் பரப்பை அடையும் விண்கற்கள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். ஆனால், அதிர்ஷ்டவசமாக பூமியில் கடற்பரப்பு அதிகம் என்பதால் இதுபோன்ற விண்கற்கள் கடலில் விழவே வாய்ப்புண்டு.
NEO 2022 QP3
இப்படி, தினந்தோறும் பல விண்கற்கள் பூமியை கடந்து செல்கின்றன. அந்த வகையில் வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி NEO 2022 QP3 எனும் விண்கல் பூமியை கடந்து செல்ல இருக்கிறது. இதன் அகலம் 110 அடியாகும் மணிக்கு 29000 வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கல் பூமியை 5.51 மில்லியன் தூரத்தில் கடக்க இருக்கிறது. இது அதிக தூரம் தான் என்றாலும், விண்கல்லின் பாதை மாறினாலோ அல்லது பூமியின் புவியீர்ப்பு விசையினால் விண்கல் பாதிக்கப்பட்டாலோ ஏற்படும் சேதங்கள் கடுமையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இதனால் பாதிப்பு இல்லை என்றே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள்
இந்நிலையில், இந்த மாத இறுதியில் இது தவிர்த்து மேலும் சில விண்கற்கள் பூமியை கடக்க இருக்கின்றன. அந்த வகையில் இன்று (ஆகஸ்டு 26) NEO 2022 QP4 எனும் விண்கல் பூமியை கடக்கிறது. 40 மீட்டர் விட்டமுள்ள இந்த விண்கல் 1,396,682 கிலோமீட்டர் தூரத்தில் பூமியை கடக்கும் என நாசா தெரிவித்திருக்கிறது. அதேபோல, NEO 2022 QQ4 எனும் விண்கல் ஆகஸ்ட் 27 ஆம் தேதியும், ஆகஸ்டு 29 ஆம் தேதி 2022 QX4 and 2017 BU ஆகிய இரண்டு விண்கற்களும் பூமியை கடந்து செல்ல இருக்கின்றன.