"மகனை பார்க்க போனா PARKING-ல தான் தூங்குவேன்".. தாயார் சொன்ன தகவல்.. எலான் மஸ்கின் REPLY பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது தாயார் கூறிய கருத்துக்கு பதில் கூறியுள்ளார். இவரது இந்த கமெண்ட் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
கரேஜ்-ல தான் தங்குவேன்
இந்நிலையில், மாடலும் எழுத்தாளருமான எலான் மஸ்க்கின் தாய் மேயி மஸ்க் சில தினங்களுக்கு முன்னர் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், டெக்சாஸ் பகுதிக்கு தான் சென்றால், அங்கேயுள்ள Garage'ல் தான் தூங்குவேன் என்றும், ராக்கெட் தளத்திற்கு அருகே நீங்கள் ஒரு ஆடம்பர வீட்டை வைத்திருக்க முடியாது என்றும் கூறி இருந்தார். உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கின் தாயார் கரேஜில் தங்கிய அனுபவம் இருப்பதாக கூறியது உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டுவந்தது.
இந்நிலையில், மேயி மஸ்க்கின் இந்த கருத்துக்கு எலான் மஸ்க் பதில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மஸ்க், "நான் பல முறை அந்த இடத்தில் தூங்கியிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தனக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை என்றும், நண்பர்கள் வீட்டில் மாறி மாறி தங்குவதாகவும் ஒரு நேர்காணலில் இலான் மஸ்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | பூமியை நெருங்கும் விண்கல்??.. ரெட் அலெர்ட் விட்ட நாசா.. பின்னணி என்ன??