"மகன பாக்க போனா.. கார் பார்க்கிங்'ல தான் தூங்குவேன்".. எலான் மஸ்க் தாயார் சொன்ன தகவல்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், உலக அளவில் நம்பர் 1 கோடீஸ்வரர் ஆவார்.

இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். உலகளவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது.
உலகளவில் முன்னணி தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரராக இருந்தாலும், எப்போதும் ட்விட்டர் பக்கத்திலும் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் எலான் மஸ்க்.
நெட்டிசன்கள் கேட்கும் ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிப்பது, மீம்ஸ்களை பகிர்வது, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிப்பது என ட்விட்டரிலும் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் எலான் மஸ்க். அவரது தொழில் மற்றும் ட்விட்டர் பதிவுகள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது ஏராளமான செய்திகள் இணையத்தில் வைரலாகும்.
இந்நிலையில், உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கின் தாயாரான மே மஸ்க், மகனை தான் சந்திக்கும் போது எங்கே தங்குவார் என்பது பற்றிய தகவல் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் தாயாரான மே மஸ்க், நியூயார்க் பகுதியில் வசித்து வருகிறார். இவர் டெக்சாஸ் பகுதியில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்திற்கு சென்றால், அங்கே தூங்கும் இடம் குறித்து, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதன்படி, டெக்சாஸ் பகுதிக்கு தான் சென்றால், அங்கேயுள்ள Garage'ல் தான் தூங்குவேன் என்றும், ராக்கெட் தளத்திற்கு அருகே நீங்கள் ஒரு ஆடம்பர வீட்டை வைத்திருக்க முடியாது என்றும் கூறி உள்ளார்.
முன்னதாக, எலான் மஸ்க் கூட ஒரு நேர்காணலின் போது, தனக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை என்றும், நண்பர்கள் வீட்டில் மாறி மாறி தங்குவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் Bay Area உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போது, அங்கே அமைந்துள்ள டெஸ்லா இன்ஜினியர்களின் வீட்டில் தங்குவேன் என்றும் எலான் மஸ்க் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் தாயார், மகனைக் காண செல்லும் போது, கார் பார்க்கிங் தூங்குவதாக தெரிவித்துள்ள தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
