"அது உலகத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்னு".. மீட்டிங்கில் அதிரவைத்த எலான் மஸ்க்.. என்ன இப்படி சொல்லிட்டாரு..?
முகப்பு > செய்திகள் > உலகம்கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பாடு குறித்து எலான் மஸ்க் தெரிவித்திருக்கும் கருத்துகள் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
எரிபொருள்
இந்நிலையில் நார்வே நாட்டில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மஸ்க், எரிபொருள் பயன்பாடு, நீண்டகால திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசியிருக்கிறார். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை குறுகிய காலத்திற்கு பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் அவற்றின் தேவை அதிகம் இருப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் பேசுகையில்,"உண்மையில், எண்ணெய் மற்றும் எரிவாயுவை நாம் குறுகிய காலத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன், இல்லையெனில் நாகரிகம் சிதைந்துவிடும்.உலகம் இதுவரை எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று நிலையான ஆற்றல் மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கு மாறுவது ஆகும். அதற்கு சில தசாப்தங்கள் ஆகும். ஆனால் இது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நடக்க வேண்டும்" என்றார்.
அணுமின் நிலையம்
இதனிடையே கருத்தரங்கில் அணுஉலையில் தேவை குறித்து பேசிய எலான் மஸ்க் தொடர்ந்து அணுஉலைகள் மூலம் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதுபற்றி அவர் பேசுகையில், "உங்களிடம் நன்கு வடிவமைக்கப்பட்ட அணுமின் நிலையம் இருந்தால், அதை மூடக்கூடாது, குறிப்பாக இந்த நேரத்தில்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐரோப்பிய நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் தவித்துவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
Also Read | பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பல்.. பயணத்தை தொடங்கிய கொஞ்ச நேரத்துல அதிகாரிகளுக்கு போன அதிர்ச்சி தகவல்..

மற்ற செய்திகள்
