Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top

ஜாதகத்தில் ஏற்படும் சிக்கல்?.. பரிகாரமாக ஜெயிலுக்கு போக விரும்பும் மக்கள்.. சிறை நிர்வாகம் எடுத்த வினோத முடிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Sep 28, 2022 04:56 PM

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள சிறை ஒன்று பொதுமக்கள் இரவு நேரத்தில் தங்க அறைகளை ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கான காரணம் தான் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Uttarakhand Haldwani prison offers real jail feel for Rs 500 a night

Also Read | தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கு.. சித்ரா ராமகிருஷ்ணன் வைத்த கோரிக்கை.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு..!

பொதுவாக சுற்றுலா என்றால் அழகிய கடற்கரைகள், அடர் வனப்பகுதிகள், வானுயர்ந்த மலைப்பிரதேங்களுக்கு தான் செல்ல பலர் நினைப்பதுண்டு. ஆனால், சிறைக்குள் சுற்றுலா செல்லலாம் என்றால் திகைப்பாக இருக்கிறதா? உண்மையிலேயே அப்படியான இடம் ஒன்று உத்திரகாண்ட் மாநிலத்தில் இருக்கிறது. அங்குள்ள பழங்கால சிறையில் பொதுமக்கள் கட்டணம் செலுத்தி தங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த சிறைக்கு செல்ல விருப்பப்படும் நபர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி எனும் சிறை கடந்த 1903 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 100 ஆண்டுகளுக்கும் மேலே பழமை வாய்ந்த இந்த சிறைக்குள் ஆயுத கிடங்கும் இருந்திருக்கிறது. மேலும், இந்த சிறைக்குள் 6 காவலர் குடியிருப்பும் இருக்கிறது. சிதிலமடைந்த நிலையில் காணப்படும் இந்த சிறை இன்னும் சில மாதங்களில் புதிய தற்காலிக சிறைவாசிகளை வரவேற்க இருக்கிறது. ஆம். கட்டணம் செலுத்தி இந்த சிறையில் ஒரு இரவு தங்க அனுமதி வழங்கப்பட இருக்கிறது.

Uttarakhand Haldwani prison offers real jail feel for Rs 500 a night

ஜாதகம்

பொதுவாக ஜாதகம் பார்க்கும்போது, ஏதாவது தோஷம் இருக்கிறது, அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் என சிலர் கூறி கேள்விப்பட்டிருப்போம். அப்படியானவற்றுள் ஒன்றுதான் இந்த ஜெயில் பரிகாரம். அதன்படி குறிப்பிட்ட ஜாதக நிலை அமையப்பெற்றவர்கள் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் இந்த சிறை கெஸ்ட் ஹவுஸுக்கு வர தயாராக இருப்பதாக கூறுகிறார் சிறை துணை சிறை கண்காணிப்பாளர் சதீஷ் சுகிஜா.

இதுகுறித்து அவர் பேசுகையில்,"இந்த விவகாரம் தொடர்பான முன்மொழிவை நான் சிறைச்சாலை இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் முன்வைத்திருந்தேன். அவர் அதைப் பாராட்டியது மட்டுமல்லாமல், ஒரு திட்ட அறிக்கையை அனுப்பும்படி என்னிடம் கேட்டார். பொதுவாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் வகையில் ஜாதக நிலைமை இருப்பதாக நம்புபவர்கள் இங்கே வர தயாராக இருக்கிறார்கள். எங்களிடம் சிறைக்குள் ஒரு கைவிடப்பட்ட பகுதி உள்ளது. அதற்குள் போலி சிறைகளை உருவாக்க இருக்கிறோம். இதற்கு 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்" என்றார்.

Also Read | தன்னோட குழந்தைக்காக அம்மா என்னவேனா செய்வாங்க.. பிரபல தொழிலதிபர் பகிர்ந்த நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..!

Tags : #UTTARAKHAND #UTTARAKHAND HALDWANI PRISON #PRISON OFFERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Uttarakhand Haldwani prison offers real jail feel for Rs 500 a night | India News.