தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கு.. சித்ரா ராமகிருஷ்ணன் வைத்த கோரிக்கை.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்தேசிய பங்குச் சந்தை ஊழல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தேசிய பங்குச் சந்தையான NSE யின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது.
Also Read | தன்னோட குழந்தைக்காக அம்மா என்னவேனா செய்வாங்க.. பிரபல தொழிலதிபர் பகிர்ந்த நெஞ்சை உருகவைக்கும் வீடியோ..!
சித்ரா ராமகிருஷ்ணன்
தேசிய பங்குச் சந்தையின் (NSE) முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். அதன்பின், சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார். தேசிய பங்குச் சந்தையான NSE யின் தலைவராக சித்ரா ராமகிருஷ்ணன் இருந்த காலகட்டத்தில் முறைகேடாக பணியாளர்களை நியமித்தது, பங்குச் சந்தை குறித்த ரகசிய தகவல்களை வெளியிட்டது ஆகிய முறைகேடுகள் நடைபெற்றதாக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி வழக்கு தொடுத்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தற்போது சித்ரா ராமகிருஷ்ணன் டெல்லியில் உள்ள திகார் சிறையில் இருக்கிறார்.
தேசிய பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை பங்கு நிறுவனங்களில் சர்வரில் இருந்து எடுத்து கசியவிட்டதாக சிபிஐ சித்ரா ராமகிருஷ்ணன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.
ஜாமீன் மனு
தேசிய பங்குச் சந்தை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன், ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவனியூ-வில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுனைனா ஷர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சித்ரா ராமகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.
இதனை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பை இன்று வெளியிட்ட நீதிமன்றம் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்-ன் முன்னாள் தலைமை குழு செயல் அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியனுக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.