Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top

ஒரே வருஷத்துல சொத்துமதிப்பு 376% உயர்வு.. உலக பணக்காரர்களுக்கே ஷாக் கொடுத்த இந்தியர்.. யாருப்பா இந்த ரவி மோடி..?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Madhavan P | Sep 28, 2022 06:34 PM

இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ரவி மோடியின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 376 சதவீதம் உயர்ந்திருப்பதாக ஹாரூன் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Who is Ravi Modi whose net worth grew 376 percent

Also Read | ஜாதகத்தில் ஏற்படும் சிக்கல்?.. பரிகாரமாக ஜெயிலுக்கு போக விரும்பும் மக்கள்.. சிறை நிர்வாகம் எடுத்த வினோத முடிவு..!

ஹாரூன் மற்றும் IIFL Wealth அமைப்பு (IIFL Wealth Hurun India Rich List 2022) இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி முதலிடத்தில் இருக்கிறார். அவருடைய சொத்துமதிப்பு 10,94,400 கோடி என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியை விட 3 லட்சம் கோடி ரூபாய் சொத்து அதிகமாக அதானி வசம் இருப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Who is Ravi Modi whose net worth grew 376 percent

ரவி மோடி

இந்நிலையில், இந்த பட்டியலில் ரவி மோடி என்னும் நபர் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். 'Manyavar' என்ற எத்னிக் உடைகள் பிராண்டின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் (MD) ரவி மோடி. ஹாரூன் வெளியிட்ட பட்டியலின்படி இவருடைய சொத்துமதிப்பு 32,400 கோடி ஆகும். கடந்த ஒருவருடத்தில் இவருடைய சொத்துமதிப்பு 376 சதவீதம் உயர்ந்திருப்பதாக ஹாரூன் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இதன் பலனாக இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ரவி மோடி கடந்த ஆண்டு 246 ஆம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது 41 ஆம் இடத்தை பிடித்திருக்கிறார். அதாவது ஒரே ஆண்டில் 205 இடங்கள் முன்னேறியிருக்கிறார் ரவி மோடி.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட தகவல்களின்படி, செப்டம்பர் 25 நிலவரப்படி அவரது நிகர மதிப்பு 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஃபோர்ப்ஸ் 2022 பில்லியனர்கள் பட்டியலில், அவர் 1,238 வது இடத்தில் உள்ளார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தன்னுடைய மகன் பெயரில் வேதந்த் ஃபேஷன்ஸ் என்னும் நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனத்தின் கீழ் தற்போது 'Manyavar' நிறுவனம் இயங்கி வருகிறது.

Who is Ravi Modi whose net worth grew 376 percent

வருவாய்

துணி வியாபாரம் செய்துவந்த தனது தந்தையிடம் இருந்து தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்ட ரவி, உத்திரபிரதேச மாநிலத்தில் முதல் தயாரிப்பு நிறுவனத்தை அமைத்தார். இவருடைய மகன் வேதாந்த் ஃபேஷன்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரியாக உள்ளார். அதேபோல இவருடைய மனைவி ஷில்பி வேதாந்த் நிறுவனத்தின் போர்ட் மெம்பர்களில் ஒருவராக இருக்கிறார். ஆண்டுக்கு 85 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் இந்த நிறுவனம் இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட கடைகளையும், 11 சர்வதேச விற்பனை நிலையங்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கு.. சித்ரா ராமகிருஷ்ணன் வைத்த கோரிக்கை.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு..!

Tags : #RAVI MODI #NET WORTH #IIFL WEALTH #IIFL WEALTH HURUN INDIA RICH LIST 2022

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Who is Ravi Modi whose net worth grew 376 percent | Business News.