"DRESS வாங்கக்கூட எங்ககிட்ட பணம் இல்ல.. இப்போ நெனச்சாலும்".. வறுமையில் வாடிய நாட்களை நினைவுகூர்ந்த எலான் மஸ்க்கின் தாய்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் தாய் தன்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து உருக்கத்துடன் பேசியிருக்கிறார்.

Also Read | அடுத்த வாரம் கல்யாணம்.. அப்பாவுக்கும் மணமகளுக்கும் வந்த வாக்குவாதம்.. கோவத்துல தந்தை செஞ்ச பகீர் காரியம்..!
எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
புது ஆடைகள்
இந்நிலையில், மாடலும் எழுத்தாளருமான மேயி மஸ்க் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். மேயி தனது கணவர் எர்ரோல் மஸ்க்கை 1979 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதைத் தொடர்ந்து, அவர் எலான் மற்றும் அவரது உடன்பிறப்புகளான கிம்பல், 49 மற்றும் டோஸ்கா, 48 ஆகியோருடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். அப்போது பொருளாதார ரீதியாக தனது குழந்தைகளுடன் தான் மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் பேசுகையில்,"நான் எலான் மற்றும் டோஸ்காவின் ஆடைகளை அணிய வேண்டியிருந்தது. ஏனென்றால் என்னால் புதிய ஆடைகளை வாங்க முடியவில்லை. வாழ்க்கையில் அது கடினமான காலம். நாங்கள் அனைவரும் ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பில் ஒரு வருடம் எப்படி வாழ்ந்தோம் என்று டோஸ்காவும் நானும் இப்பொது கேலி செய்து கொள்வோம். விவாகரத்துக்கு பிறகு குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | வீடா இல்ல சொர்க்கமா..? மகனுக்காக அம்பானி வாங்கிய சொகுசு வில்லா.. உள்ள இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

மற்ற செய்திகள்
