"2 நாள்ல 10 மடங்கு பெருசாகிடுச்சு.. அது ஒன்னு மட்டும் நடக்காம இருக்கணும்".. சூரியனில் உருவான SUN SPOT.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சில தினங்களுக்கு முன்னர் சூரியனில் கண்டுபிடிக்கப்பட்ட Sun spot எனப்படும் கரும்புள்ளி அதிவேகமாக விரிவடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Also Read | ஊர் முழுவதும் வறட்சி.. "11 கோடி வருச 'மர்மம்' வெளிய வந்துருக்கு".. ஆடி போன ஆராய்ச்சியாளர்கள்!!
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனை சுற்றிவருகின்றன. சொல்லப்போனால் சூரியனே பால்வழி மண்டலத்தின் மிகப்பெரிய ஒளிமூலமாக இருக்கிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சூரியனில் புள்ளிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது சாதாரண அளவில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களில் இது 10 மடங்கு வளர்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்த புள்ளிகள் பூமிக்கு நேராக அமைந்திருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்படும் சூரிய புயல்கள் பூமியை தாக்கக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிய புயல்
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய நட்சத்திரமான சூரியன் தற்போது தனது 11 வது சூரிய சுழற்சியில் உள்ளது. அணுக்கள் ஒருங்கிணைவதால் உருவாகும் கணிசமான வெப்பமே சூரியன் தொடர்ந்து ஒளிர காரணமாக அமைந்திருக்கிறது. இந்த அதீத வெப்பம் காரணமாக சில சமயங்களில் சூரியனின் வெளிப்புற பரப்பில் இருந்து வெடிப்பு ஏற்பட்டு சூரிய துகள்கள் மற்றும் மின்காந்த அலைகள் பிற கிரகங்களை நோக்கி தள்ளப்படும். இதனை கொரோனல் மாஸ் எஜெக்ஷன் என்கிறார்கள். மேலும் இது சூரிய புயல் எனவும் அழைக்கப்படுகிறது.
வழக்கமாக சூரியனில் இருந்து வெளிவரும் சூரிய புயல்கள் மின்காந்த அலைகளில் வித்தியாசத்தை ஏற்படுத்துவதோடு விண்ணில் சுழலும் செயற்கை கோள்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் திகழும். தற்போது சூரியனில் உருவாகியுள்ள சன் ஸ்பாட் AR3085 எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் அளவில் இந்த சன் ஸ்பாட் பெரிதாகி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஏற்படும் சூரிய புயல்கள் C வகையை சேர்ந்தவையாக இருக்கும் எனவும் இதனால் பெரியளவில் ஆபத்து இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வகைகள்
இருப்பினும், வரும் நாட்களில் இந்த சன்ஸ்பாட்-ன் அளவு பெரிதானால் இதன் மூலம் ஏற்படும் சூரிய புயல்களும் வலிமையானதாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். வழக்கமாக சூரியனில் ஏற்படும் சூரிய புயல்களில் A, B, C வகைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் குறைவானவை. ஆனால், M - வகை சூரிய புயல்கள் உயர் அட்ச ரேகைகளில் ரேடியோ பிளாக்அவுட்களை ஏற்படுத்தும் திறன் கொண்டது. அதேபோல, X - வகை சூரிய புயல்கள் ரேடியோ பிளாக்அவுட்களை ஏற்படுத்துவதோடு, செயற்கை கோள்களையும் பாதிக்கும் என்கிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா.

மற்ற செய்திகள்
