‘100 அடி பள்ளம்’.. தலைக்குப்புற கவிழ்ந்த கண்டெய்னர் லாரி..! சென்னைக்கு மாவு லோடு ஏற்றி வந்தவருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Jan 13, 2020 09:38 PM
வேலூர் அருகே கண்டெய்னர் லாரி 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னைக்கு மைதா மாவு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்துள்ளது. இன்று அதிகாலை வி.கோட்டாவில் இருந்து பேரணாம்பட்டு அருகே லாரி வந்துள்ளது. அப்போது தமிழக-ஆந்திர எல்லை மலைப் பகுதியில் உள்ள ஆபத்தான வளைவில் லாரி கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சுமார் 100 அடி பள்ளத்தில் லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் லாரி ஓட்டுநர் பஷீர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.