'என்கிட்ட கொடுத்த அந்த வாக்க தவறிட்டார்...' 'ஒரே வீடு தான், ஆனா ரெண்டு வாழ்க்கை...' - விவாகரத்திற்கு சொன்ன 'வினோத' காரணம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அரபு நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரை இரண்டு ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்துள்ளார்.
அரபு நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கழித்து அபுதாபி உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். இளம்பெண் கொடுத்துள்ள மனுவில், தன் கணவர் தன்னுடைய திருமணத்தின் போது விமர்சையாக ஒரு குடும்ப விழாவை நடத்த உறுதியளித்ததாகவும், ஆனால் அவரிடம் போதிய வருமானம் இல்லாததால் இதுவரை விருந்து விழாவை ஏற்பாடு செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் என் செலவிற்குகென்று ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டு ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் தனி தனி அறைகளில் தான் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருமண சடங்கின் போது மணமகன் மணப்பெண்ணுக்கு இந்திய மதிப்பில் 19,99,564 ரூபாயை கொடுத்துள்ளார் எனவும், ஆனால் மணப்பெண் பணக்கார வீட்டு பெண் என்பதால் திருமணத்தின் போது அவர் அணிந்திருந்த கவுனின் விலை மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 39,99,128 ரூபாய் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கணவருடன் வாழ பிடிக்காத அரபு பெண்மணி அபுதாபி உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்துவிட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்தை ஏற்றதோடு, திருமணத்தின்போது அந்த வாலிபர் கொடுத்த ஒரு லட்சம் திரஹமில் 80 ஆயிரம் திர்ஹமை வழங்கவேண்டும் என்றும், அதுபோல் மணப்பெண்ணுக்கு நஷ்ட ஈடாக 30 ஆயிரம் திர்ஹமை கொடுக்கவும் உத்தரவிட்டதுள்ளதும் குறிப்பிடத்தக்கது.