“தமிழர்கள் மடிந்த நாளில் ராஜபக்சேவுக்கு நன்றி சொன்னவர்”.. “போர் விசாரணையில் இலங்கையில் அமைதி நிலவுவதாக கூறியவர்”.. - முத்தையா மீது இலங்கை வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 18, 2020 07:59 PM

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகிதையடுத்து தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் உருவாகின.

Srilanka Tamilians oppose VijaySethupathi 800 movie criticize muthaiya

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின்றன. இதுகுறித்து வடகிழக்கு போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் பேசும்போது, தமிழர்கள் செத்து மடிந்த நாளில், போரை வெற்றிகரமாக முடித்ததற்காக மகிந்த ராஜபக்சேவுக்கு முத்தையா முரளிதரன் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

அதேபோல் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு உலகம் முழுவதிலும் இருந்த தமிழர்களால் கோரிக்கை எழுந்தபோது இலங்கையில் அமைதி மட்டுமே நிலவுவதாகவும் அங்கு போர் நிகழவில்லை என்றும் முத்தையா முரளிதரன் கூறியதாகவும், அத்துடன் கோத்தபயே ராஜபக்சவை ஆதரித்து முத்தையா முரளிதரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Srilanka Tamilians oppose VijaySethupathi 800 movie criticize muthaiya | India News.