99 வயசு பாட்டியின் வினோத ஆசை.. கோடி-ல ஒருத்தருக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.. உருக வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் 99 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய நீண்ட கால ஆசையை நிறைவேற்றியுள்ளார். சொல்லப்போனால் அவரது பெரிய குடும்பம் அதனை நிறைவேற்றியிருக்கிறது.

கூட்டு குடும்பங்கள் உலகின் மிக அரிதான விஷயமாகிவிட்டது. மேலும், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்று வளர்ப்பதே சிரமமான காரியம் என நினைக்கும் தலைமுறையில் பலரையும் திகைக்க வைத்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த மார்குரைட் கொல்லர். இவருக்கு தற்போது 99 வயதாகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இவர் தனது 100 வது கொள்ளு பேத்தியின் பிறப்பை அருகில் இருந்து பார்த்திருக்கிறார். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
காதல்
தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் கன்னியாஸ்திரியாக வேண்டும் என நினைத்திருக்கிறார் கொல்லர். ஆனால், அவருக்கும் வில்லியம் என்பவருக்கும் காதல் அரும்பியுள்ளது. இதன் பலனாக இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் 11 குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார் கொல்லர். இவருக்கு 56 பேர குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களின் மூலமாக 99 கொள்ளு பேர குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி 100 ஆகியுள்ளது.
இதனால் பெரிதும் மகிழ்ச்சியில் இருக்கும் கொல்லர் இதுபற்றி பேசுகையில்," ஒன்று இரண்டு குழந்தைகள் இருந்த போது தனிமையில் இருப்பதை உணர்ந்தேன். ஆகவே எனக்கு மிகப்பெரிய குடும்பம் வேண்டும் என நினைத்தேன். தற்போது என்னுடைய 100வது கொள்ளு பேர குழந்தையினை கையில் ஏந்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவு மகிழ்ச்சியடைந்துள்ளேன்" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
100 வது கொள்ளு பேத்தி
கொல்லரின் கணவர் வில்லியம் கடந்த 2008 ஆம் ஆண்டு மரணமடைந்தார். தற்போது தன்னுடைய மிகப்பெரிய குடும்பத்தினருடன் வசித்துவரும் கொல்லர் இன்னும் இரண்டு மாதங்களில் தன்னுடைய 100வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில், கொல்லரின் 100வது கொள்ளு பேத்திக்கு கொல்லர் வில்லியம் பால்ஸ்டர் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. அதாவது கொல்லரின் பெயரும் அவருடைய கணவருடைய பெயரும் அந்த குழந்தைக்கு சூட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கொல்லரின் 100வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
