இந்த குழந்தைக்கு நான் 'அப்பா' இல்ல...! 'திருமணம் முடிந்து 6 மாதத்தில் பிறந்த குழந்தை...' - விசாரணை 'முடிவில்' காத்திருந்த 'அதிரடி' டிவிஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேசத்தை இளைஞர் ஒருவர் 6 மாதத்தில் குழந்தை பெற்ற தன் மனைவியை வீட்டை விட்டு தூரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண்ணுடன் முகநூலில் நட்பு ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். காதலோடு மட்டுமில்லாமல் இருவரும் தங்கள் பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த 6 மாதத்தில் இந்த தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளனர். முதலில் அந்த பெண்ணை பாசமாக பார்த்து கொண்ட மாமியார் வீட்டார் சில வாரங்களிலேயே 6 மாதத்தில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அதோடு அக்கம் பக்கம் வீட்டாரும் அரசல் புரசலாக பேசி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டுள்ளனர். ஆனால், அந்த பெண்ணோ மறுப்பு ஏதும் பேசாமல் இது எங்களுடைய குழந்தை தான் என் கணவருக்கு உண்மை தெரியும் எனக் கூறிவந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் கணவர் குழந்தைக்கு நான் தந்தை இல்லை என கூறவே விஷயம் விபரீதமாகி குடும்பத்தில் பெரும் சண்டையே ஏற்பட்டுள்ளது. மேலும், நீ இந்த வீட்டில் இருந்தால் என் குடும்ப மானமே போய்விடும் வெளியே போ எனக் கூறி இளம்பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். அதற்கு அந்த பெண்ணின் கணவரும் எந்த ஆதரவும் இல்லை.
இதையடுத்து அந்த பெண் நீதி வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கு விசாரணையின் போது அந்தப்பெண்ணின் கணவன், மாமியார் ஆகியோர் கவுன்சிலிங் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது கூட அப்பெண்ணின் கணவர் இந்த குழந்தைக்கு நான் தந்தை இல்லை எனக் கூறி வாதிட்டுள்ளார்.
DNA பரிசோதனை செய்தால் உண்மை தெரிந்துவிடும் அதற்கான ஏற்பாட்டை செய்துவிடலாம் எனவும் அப்பெண்ணின் கணவர் கூறியுள்ளனர். அதன்பின் கவுன்சிலிங் சென்ற அந்தப்பெண் திருமணத்துக்கு முன்பு நடந்த ரகசியத்தை ஏற்கனவே உடைத்துவிட்டுள்ளார்.
அப்போது தான் இரு வீட்டாருக்கும் திருமணத்திற்கு முன்பே இருவரும் தனியே வீடு எடுத்து தங்கியதாக தெரிவித்துள்ளார். அப்போது கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார்.
இருவரும் தாம்பத்தியத்தில் இருந்தபோது அந்தப்பெண் கருவுற்றுள்ளர். கணவன் – மனைவிக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியம் இப்போது இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் திருமணத்துக்கு முன்பு மனைவியை கர்ப்பமாக்கியதை வெளியில் சொல்ல தைரியம் இல்லாமல் தான் கணவரும் அப்பெண்ணை சந்தேகப்படுவது போல் நடித்துள்ளார்.
அதன்பின் அப்பெண்ணின் கணவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு தைரியம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து மாமியார் தன் மருமகளையும் பேரனையும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மற்ற செய்திகள்
