கொதிக்கிற பாலைவனத்துல சிக்கிக்கிட்ட 86 வயசு பாட்டி.. கொஞ்சம் கூட யோசிக்காம இளம் பெண் போலீஸ் எடுத்த முடிவு.. கொண்டாடிய மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொதிக்கும் பாலைவனத்தில் சிக்கிக் கொண்ட 86 வயது மூதாட்டியை இளம் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு தனது தோள்களில் தூக்கிச் சென்ற சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
தகிக்கும் பாலைவனம்
புகழ்பெற்ற குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பாலைவனத்தில் எப்போதுமே வெயில் தகிக்கும். அதுவும் கோடைகாலம் என்றால் சொல்லவே வேண்டாம். வார்த்தைகளில் விவரிக்க முடியாத அந்த வெப்பத்தினூடே மக்கள் இந்த பாலைவனத்தில் நடந்து செல்ல பழகிவிட்டனர். ஆனால் 86 வயதான ஒரு பாட்டியால் அது முடியாமல் போயிருக்கிறது. குடிக்க தண்ணீர் இல்லை. நடந்து செல்ல தெம்பும் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற வேளையில் அங்கே வந்து இருக்கிறார் இருபத்தி ஏழு வயதான வர்ஷா பார்மர் என்ற இளம் பெண் போலீஸ் அதிகாரி.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் அல்லது ஆட்களை கூப்பிடவோ அவர் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை. "எனது தோளில் ஏறிக் கொள்ளுங்கள். உங்களை நான் பத்திரமாக கொண்டு போய் சேர்க்கிறேன்" என்று சொல்லி அந்த வயதான மூதாட்டி தனது தோளில் சுமந்து கொண்டு தகிக்கும் பாலைவனத்தில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அந்த பாட்டியை காப்பாற்றியிருக்கிறார் வர்ஷா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கலங்க வைத்திருக்கிறது.
சமூக கடமை
தன்னலம் இல்லாமல் அந்த பாட்டியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் செயல்பட்ட வர்ஷாவை குஜராத் போலீஸ் பாராட்டியிருக்கிறது. இது குறித்து பேசிய வர்ஷா "நான் அந்த பாட்டியை பார்க்கும்போது அவரால் நடக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். பாலைவனத்தின் அந்த பகுதிக்கு வாகனங்களை எடுத்து வருவதும் சாத்தியமில்லாதது. ஒரு போலீஸ் அதிகாரியாக என்னுடைய கடமை சமூகத்திற்கு உதவுவதே. ஆகவே நான் அவரை எனது தோளில் சுமந்து செல்ல முடிவெடுத்தேன். என்னால் முடிந்த அளவு வேகத்தில் நடந்து சென்று அந்த பாட்டியை காப்பாற்றினேன்" என்றார்.
தராட் தாலுகாவின் உந்த்ரனா கிராமத்தைச் சேர்ந்தவர் வர்ஷா. கால்நடைகளை வளர்த்து வரும் அப்பா. இல்லத்தரசியான அம்மா. படிக்கும் தம்பி என ஆரம்பம் முதலே வறுமைதான். கஷ்டப்பட்டு படித்த வர்ஷா 2021 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தார். சில தினங்களுக்கு முன்னர் ராம் கதா பகுதியில் அமைந்துள்ள பஞ்தா தாதா கோவிலுக்குச் சென்ற அந்த பாட்டியால் வெயிலைத் தாங்க முடியாமல் போயிருக்கிறது.
நான் இருக்கிறேன்
இதனால் மயக்கமடைந்த பாட்டி குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட்டு இருக்கிறார். அப்போது அங்கு வந்த வர்ஷா அங்கிருந்த ஒரு பெண்மணியிடம் இருந்த தண்ணீரை எடுத்து பார்ட்டிக்கு கொடுத்திருக்கிறார். பாட்டி ஆசுவாசம் அடைந்தபிறகு தன்னால் நடக்க முடியவில்லை என்று கவலையுடன் கூறியுள்ளார் பாட்டி. நான் இருக்கிறேன் என்று சொல்லி வர்ஷா அந்த பாட்டியை சுமந்து 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அவரை காப்பாற்றி இருக்கிறார். இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
ગુજરાત પોલીસનું ગૌરવ: ૮૬ વર્ષના વૃદ્ધાને પ્રાથમિક સારવાર આપી ખભે ઊંચકી ૫ કિમી ધોમધખતા તાપમાં ચાલીને માનવસેવાનું ઉત્કૃષ્ઠ ઉદાહરણ પૂર્ણ પાડતા કચ્છ (પૂર્વ) જિલ્લાના મહિલા પોલીસ કોન્સ્ટેબલ વર્ષા પરમાર#KhakhiTaneSalaamChe #helpingpeople #Fitness #Sensitivity #Service #GujaratPolice pic.twitter.com/ukBtmr8ph4
— Gujarat Police (@GujaratPolice) April 23, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8