இந்தியா-பாகிஸ்தான் 'எல்லையில்' பிறந்த குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயர்...! 'இத' விட பொருத்தமான பெயர் 'உலகத்துல' எங்க தேடினாலும் கிடைக்காது...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ரஜன்பூர் மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினர் இந்தியாவில் உள்ள கோயில்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளனர்.
அதன்பின்னர், அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக முயற்சி செய்துள்ளனர். ஆனால் இந்தியா- பாகிஸ்தானின் எல்லையான அட்டாரி பகுதியில், போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்கள் ஊருக்கு திரும்பி செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த குடும்பத்தினர் அட்டாரி எல்லையில் தங்கி உள்ளனர். இவர்களில் 47 பேர் சிறுவர் சிறுமிகள். அவர்களில் 6 பேர் இந்தியாவில் பிறந்தவ குழந்தைகள். ஒரு வயது நிறைவடையாதவர்கள்.
இந்த நிலையில், எல்லையில் தங்கியிருக்கும் அந்த குடும்பத்தில் ஒருவரான பாலம் ராமின் மனைவி நிம்பு பாய் நிறைமாக கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் கதறி துடித்த நிலையில் அந்த பகுதியில் இருந்த உள்ளூர் மக்கள் அவருக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அவருக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது. பாலம் ராம் மற்றும் நிம்பு பாய் தம்பதியினர் எல்லையில் தங்கியிருந்தபோது தங்களுக்கு குழந்தை பிறந்ததால் அக்குழந்தைக்கு ‘பார்டர்’ என பெயர் சூட்டியுள்ளனர்.