நான் 'அப்பா' ஆயிட்டேன்...! யாருங்க இவரு...? 'வாழ்க்கை'ய அணு அணுவா ரசிச்சு வாழுறாரே...! - 54 வயசுல மாஸ் காட்டும் பிளே பாய்...!
முகப்பு > செய்திகள் > உலகம்என்னுடைய வாழ்க்கையை இப்போது தான் வாழ தொடங்கியுள்ளேன் என கையில் கை குழந்தையோடு கூறியுள்ளார் 54 வயதான இன்ஸ்டா பிரபலம் ஜியான்லூகா வச்சி.

இத்தாலியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ஜியான்லூகா வச்சி ஜூன் 5-ஆம் தேதி 1967-ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவரின் பெற்றோர் பேங்க் ஆப் போரியாவின் பிரசிடெண்ட். பிறக்கும் போதே பணக்கார வீட்டு குழந்தையாக பிறந்தாலும் ஜியான்லூகா சிறு வயதிலிருந்தே கூச்ச சுபாவமாக இருப்பவராம்.
தன்னுடைய 25 வயதில் எகனாமிக்ஸ் படித்து தன் அப்பாவின் சொந்த தொழிலை நடத்த ஆரம்பித்துள்ளார். அதன்பின் தன்னுடைய 29-வது வயதில் சிறு சிறு கம்பனிகளின் பங்கை வாங்கி சீக்கிரம் வளர்ந்துள்ளார். என்னதான் வணிகத்தில் கொடிகட்டி பறந்தாலும் தன்னுடைய 45 வயதில் தான் அவருக்கு ஒரு வெளிச்சம் பிறந்துள்ளது.
பெரிய பணக்காரான இவர் தான் செய்யும் வேலைகளுக்கு எல்லாம் அப்படியே பாஸ் பட்டன் போட்டுவிட்டு தன்னுடைய கனவுகளை நோக்கி வேட்டையாட ஆரம்பித்துள்ளார். அடிடா மேளத்தை என விஜே வகை மாறி தற்போது சோசியல் மீடியா இன்பிலுசேராக மாறியுள்ளார்.
இவரின் இன்ஸ்டா பக்கத்தை பார்த்தாலே என்னடா இது இது எல்லாம் இவர் சம்பாதித்ததா என தோன்றும். பல வகையான கார்கள் எனவும், சொந்தமாக கப்பல், விமானம் என அனைத்தையும் வாங்கி போட்டுள்ளார்.அதோடு மியாமியில் 7000 சதுர அடியில் ஒரு பண்ணை வீட்டையே தனியாக ஆண்டு வந்தார்.
பேச்சிலர் வாழ்க்கையை செமையாக அனுபவித்து வந்த ஜியான்லூகா வாழ்க்கையில் 2017-ஆம் ஆண்டு திடீரென நுழைந்தவர் தான் 26 வயதான மாடல். பல வருடங்கள் டேட் செய்த இருவருக்கும் சமீபத்தில் ப்ளூ என்ற ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சந்தோஷத்தில் என்னுடைய 54 வயதில் தான் நான் நான் என் வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளேன் என பெருமிதமாக கூறுகிறார் ஜியான்லூகா.

மற்ற செய்திகள்
