'பாரதி' பாப்பா இனிமேல் 'நம்ம' வீட்டு குழந்தை...! 'நவம்பர் 6 தான் கடைசி தேதி, அதுக்குள்ளே ஊசி செலுத்தியாகணும்...' - உயிரை காக்க பேருதவி செய்த BEHINDWOODS SUBSCRIBERS...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த சில வாரங்களுக்கு முன் வினோத நோயால் பாதிக்கப்பட்ட பாரதி என்ற குழந்தைக்கு சுமார் 16 கோடி மதிப்புள்ள தடுப்பூசி போடவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் உயிரை காப்பாற்ற இணையம் வழியாக கிரௌட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்த குழந்தைக்கு எஸ்எம்எ ஜீன் குறைபாடு இருப்பதாகவும், இந்த குறைபாடு குழந்தைக்கு தசை சிதைவை ஏற்படுத்தி செயல்பட விடாமல் தடுக்கும் என மருத்துவ துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், பாரதி குழந்தையின் நிலை குறித்து Behindwoods தளத்தில் செய்தி வெளியிட்ட பின்னரே இந்த நோயின் தீவிரம் குறித்து மக்களிடம் வெகுவாகப் பரவியது.
மேலும் அந்த குழந்தைக்கு உதவும் வகையில் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பணம் வரத் தொடங்கியது.
எஸ்எம்எ ஜீன் குறைபாடிற்கு சுமார் 16 கோடி மதிப்புள்ள தடுப்பூசி போடவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் இதுவரை சுமார் 9 கோடி ரூபாய் அளவிற்கு பணம் திரட்டப்பட்டுள்ளதாக பாரதியின் தாய் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நாட்கள் செல்ல செல்ல வரும் பணத்தின் அளவு குறைந்து வருவதாகவும், தன் குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுமாறும் பாரதியின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
அதோடு, நவம்பர் 6-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட இருப்பதால் குறைந்த நாட்களுக்குள் அதிக பணம் தேவைப்படுகிறது என்றும், இதுவரை இரண்டு லட்சம் பேர் பண உதவி அளித்துள்ளதாகவும் அவரது அம்மா கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த பிஹைண்ட்வுட்ஸ் பவுண்டேஷன் தன் பங்கிற்கு பாரதி பாப்பாவின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டி இரண்டாவது பெரிய தொகையாக ரூ. 19,91,913 பணத்தை அவர்களுக்கு அளித்துள்ளது.
இன்னும் 70 ஆயிரம் பேர் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் அளித்தால் அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய தொகை வந்துவிடும் என்று பாரதியின் அம்மா மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாரதி பாப்பா குறித்து கேள்விபட்ட நடிகர் விஜய் சேதுபதி மூன்று நாட்களுக்கு முன் 20 லட்ச ரூபாய் பண உதவி அளித்து ஆறுதல் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பாரதி குழந்தைக்கு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாக பரவிவரும் தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்த பாரதியின் அம்மா, நல்ல உள்ளங்கள் அனைவரும் தங்களுக்கு உதவிடுமாறு வேண்டிக்கேட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
