‘நள்ளிரவில் யூடியூப்க்காக’... ‘மாணவர்கள் செய்த காரியம்’... ‘பீதியில் ஓடிய மக்கள்’... வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Nov 12, 2019 02:50 PM

யூடியூப் சேனலுக்காக பேய் போன்று உடைகள் அணிந்து, நள்ளிரவில் பிராங்க் (Prank) செய்து மக்களை, பயமுறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ghost prank videos in bengaluru 7 youtuber arrested

அட்வென்சர் என்ற பெயரிலும், லைக்ஸ் மற்றும் வைரலுக்காக தற்போது, சமூக வலைத்தளங்களை சிலர் தவறாக பயன்படுத்துவதாக, அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் சிலர், ‘பிராங்க் ஷோ’ என்ற பெயரில் தங்களது யூடியூப் சேனலுக்காக , நள்ளிரவில் மக்களை பயமுறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யஷ்வந்த்பூர் ஷரிப் நகரில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில், ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதில் வந்த ஆட்டோ ஓட்டுநரை பயமுறுத்த எண்ணிய மாணவர்கள் சிலர், வீடியோ ரெக்கார்டிங் செய்வதற்காக ஒளிந்துகொள்ள, ஒரு சிலர் பேய் போன்று உடை அணிந்து, விக் வைத்து, ரத்தம் சொட்ட சொட்ட வருவதுபோல், சென்று அவரை பயமுறுத்தியுள்ளனர். ஆள் அரவம் இல்லாத அந்த சாலையில், தனியாக மாட்டிக்கொண்டதால், பேய் தான் என்று நம்பி பின்னாடியே ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார்.

பின்னர்தான் இது பிராங்க் ஷோ என தெரியவந்தது. இதனால் அதிர்ந்துபோன அவர், காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுத்தார். இதேபோல், அந்த வீதியில் நடந்துசென்ற பலரையும், அந்த மாணவர்கள் பயமுறுத்தியதால், அவர்களும் புகார் கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், 7 மாணவர்கள் சேர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு கொண்டிருந்ததைக் கண்டு, அவர்களை கைதுசெய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதுபோல் நடைமேடையில் தூங்கியவர்கள், காரில் சாலையில் தூங்கிய ஓட்டுநர் ஒருவர் என அந்த மாணவர்கள் ஏராளமானவரை பயமுறுத்தி வந்தது தெரியவந்தது. அதில் ஒரு மாணவனிடம், பேய் பிராங்க் வீடியோக்கள் ஏராளமாக பதிவுசெய்து, செல்ஃபோனில் வைத்திருந்ததை கண்டுபிடித்து, அதனை பறிமுதல் செய்தனர். மேலும் மாணவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, மாணவர்களை எச்சரித்து பெயிலில் விடுவித்தனர். அவர்கள் பல நாட்களாக இதுபோன்று ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

Tags : #PRANK #SHOW #YOUTUBE