கொரோனா அச்சமின்றி பார்ட்டியில் ஆட்டம் போட்ட கும்பல்!.. வீடியோ வெளியானதால்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 15, 2020 11:54 PM

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்துக்கொண்டும், பெருமளவில் அச்சுறுத்தியும் வரும் நிலையில் கொரோணா பற்றிய அச்சம் சிறிதுமின்றி சமூக இடைவெளியை பின்பற்றுவது பற்றி சற்றும் கவலைப்படாமல் பிறந்தநாள் பார்ட்டி விழாவில் பலரும் நெருக்கமாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Birthday Party without following corona awareness

இந்தோனேசியாவின் தலைநகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் விமானி ஒருவர் தனது 21வது பிறந்த நாள் விழாவிற்கு நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பார்ட்டியில் மது சகிதமாக குடித்துவிட்டு சமூக இடைவெளியை பின்பற்றாமலும், கொரோனா குறித்த எவ்வித விழிப்பும் இல்லாமலும், பலரும் ஆடி பாடி மகிழ்ந்துள்ளனர்.

இந்த பார்ட்டியில் பெரும்பாலும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து இந்த வீடியோவில் உள்ள நபர்கள் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.