தமிழகத்தில் 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ் - பரபரப்பு தகவல் || இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது
முகப்பு > செய்திகள் > தமிழகம்1. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசலப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற 2 வகை வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” வைரஸ் (பேட் கோவிட்) காணப்படுகிறது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2. கர்நாடகம், சண்டிகர், பஞ்சாப், தெலுங்கானா, குஜராத், ஒடிசா மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” வைரஸ் இல்லை.
3. தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் காணப்படுகிற “வவ்வால் கொரோனா” வைரசுக்கும், மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கொரோனா வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
4. கேரள மாநிலம் புனலூரில் ஊரடங்கால் ஆட்டோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்ட 65 வயது தந்தையை அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.
6. நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள் என அங்கு பணிபுரியும் டாக்டர் மர்லின் கேப்லன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
7. கொரோனா ஊரடங்கால், இந்தியாவில், கிட்டத்தட்ட தினக்கூலி செய்யும் 4 கோடி குழந்தைகள் பசியில் தூங்க செல்வதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
8. இந்தியா அனுப்பி வைத்த 28 லட்சம் பாராசிட்டமால் மாத்திரை பாக்கெட்டுகள் இங்கிலாந்து சென்றடைந்தன. இந்தியாவுக்கு இங்கிலாந்து அரசு புகழாரம் சூட்டியது.
9. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவிலேயே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
10. சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர்ந்தவர்கள் படும் கஷ்டத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.