புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்...' முதல் இடம் யாருக்கு...? 'முக்கியமா அவங்கள ஓவர்டேக் பண்ணியாச்சு...' - யூனிசெப் அமைப்பின் சர்வே...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது.
இந்த வருடமும் புத்தாண்டு தினமான இன்று, ஜனவரி 1-ஆம் தேதி பிறந்துள்ள குழந்தைகள் பற்றி தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் ஜனவரி 1-ஆம் தேதி உலகம் முழுவதும் 3,71,504 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இதில் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உள்ள ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா தொடர்ந்து இரண்டாவதாக முதலிடம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்தியாவில் புத்தாண்டு அன்று குழந்தை பிறப்பு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டில் இந்தியாவில் 67,395 குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்த வருடம் புத்தாண்டில் குழந்தை பிறப்பு விகிதத்தில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இந்த புத்தாண்டில் மட்டும் 35,615 குழந்தைகள் பிறந்துள்ளன. இதற்கு அடுத்தப்படியாக நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312), எகிப்து (9,455), பங்களாதேஷ் (9,236) மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (8,640) குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.