'ப்பா... அவங்க கண்ண பாருங்களேன்... பயம்னா என்னனே தெரியல'!.. மேட்ச்சின் நடுவே... அதிர்ச்சியில் ஆடிப்போன கேப்டன் கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றதை அடுத்து, 2 வீரர்களின் திறமையை பற்றி கேப்டன் கோலி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டி20 போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2க்கு 2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இதையடுத்து நாளை நடைபெறவுள்ள 5வது டி20 போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
நேற்றைய போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 57 ரன்களை குவித்தார். கடந்த இரண்டாவது போட்டியில், தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 3வது போட்டியில் நீக்கப்பட்ட அவர், நேற்றைய 4வது போட்டியில் மீண்டும் களமிறங்கி விளையாடினார்.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் அவர் சிறப்பாக விளையாடியதாக பாராட்டு தெரிவித்துள்ள கேப்டன் விராட் அவருடைய ஆட்டம் விவரிக்க முடியாத வகையில் இருந்தததாக கூறியுள்ளார். கடந்த 2வது போட்டியில் இஷான் கிஷன் ஆடியதை போலவே சூர்யகுமாரின் ஆட்டமும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷன் இருவரும் பயமின்றி ஆட்டத்தை எதிர்கொள்வதாகவும் விராட் கோலி பாராட்டியுள்ளார். சூர்யகுமாரின் ஆட்டத்தை பார்த்து தான் திகைத்ததாகவும், அடுத்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.