என் மனைவிக்கு இன்னொருத்தரோட தொடர்பு இருக்கு.. நைட்ல அடிக்கடி போன் வருது.. வேணும்னா செக் பண்ணி பாருங்க.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 22, 2022 01:50 PM

தொடுபுழா: கேரளாவில் கணவர் ஒருவர் தன் மனைவி பேசிய போன் கால்களை மட்டுமே ஆதாரமாக வைத்து விவாகரத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kerala, a husband divorces his wife on the basis of phone calls

இன்ஜினியரிங் படிச்சிட்டு.. சுயேட்சையாக களம் இறங்கி வெற்றி பெற்ற 22 வயது இளம் வேட்பாளர்

பொதுவாக திருமணமானவர்கள் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது ஒருவரை ஒருவர் ஏமாற்றி வந்தாலோ குடும்ப நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து வாங்க முயற்சிக்கலாம். எந்த காரணமாக இருந்தாலும் சரி நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரமும் ஆவணமும்.

இந்நிலையில் கேரள மாநிலம் குருப்பம்பட்டியில் வசிக்கும் ஒருவர் தன் மனைவி தன்னை ஏமாற்றி வருவதாக கூறி விவாகரத்து கேட்டுள்ளார்  கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சில மாதங்கள் காதலுடனே வசித்து வந்துள்ளனர்.

விவாகரத்து மனு தாக்கல்:

விவாகரத்து மனு தாக்கல் செய்த நபரின் மனைவி தொடுபுழாவில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். அதோடு அந்த நபர், விவாகரத்து மனுவில், திருமணத்திற்கு முன்பும் அதன் பின்னரும் தன்னுடைய மனைவி வாரிய அதிகாரி ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதோடு இவர்களின் உறவு தொடர்பான சாட்சியமாக அக்டோபர் 2012 மற்றும் ஜூலை 2013 ஆம் ஆண்டு வரை தன் மனைவிக்கு வந்த தொலைபேசி அழைப்பு பதிவுகள் அனைத்தையும் குடும்ப நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது மனைவியின் தரப்பில் இருந்து, 'உயர் அதிகாரியிடம் இருந்து அழைப்புகள் வருவது இயல்பு தானே' என கூறப்பட்டது.

Kerala, a husband divorces his wife on the basis of phone calls

தொலைபேசி தொடர்புகள் மட்டுமே ஆதாரமாக எடுத்து முடியாது:

ஆனால், உயர் நீதிமன்றமோ ஒரு நாளில் அடிக்கடியும், குறிப்பாக இரவு நேரங்களிலும் அடிக்கடி அழைப்புகள் வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும் கள்ளக்காதல் தொடர்பான இந்த விவாகரத்து மனுவிற்கு தொலைபேசி தொடர்புகள் மட்டுமே ஆதாரமாக எடுத்து முடியாது எனவும் நீதிமன்ற தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், மறுத்தரப்பில் இருந்து வாதாடிய பாதிக்கப்பட்ட கணவர் ஒருமுறை மனைவிக்கும் அதிகாரிக்கும் இடையேயான அந்தரங்க உரையாடலைக் கேட்டதாகவும், அவரது எச்சரிக்கையையும் மீறி அவர் தொடர்ந்து அழைத்து பேசினார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

செல்போனில் பேசியுள்ளது உறுதி:

கடைசியில் தீர்ப்பின் போது உயர் நீதிமன்றம் கூறியதாவது, 'இரண்டாவது பிரதிவாதியுடன் (அதிகாரி) செல்போனில் பேசியது குறித்து கணவன் மனைவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார், அதன்பிறகு அதை நிறுத்த சொல்லியும் மனைவி மீண்டும் மீண்டும் அதை செய்தது ஏற்புடையது அல்ல. சோதனை செய்து பார்த்தபோது அவருடன் எல்லா நாட்களிலும், ஒரே நாளில் பல முறையும் செல்போனில் பேசியுள்ளது உறுதி செய்யப்படுகிறது.

Kerala, a husband divorces his wife on the basis of phone calls

எனவே இந்த சாட்சி வலுவாக இருக்கும் பட்சத்தில் இருவருக்கும் விவாகரத்து வழங்க நீதிமன்றம் சம்மதிக்கின்றது' என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பணத்த பார்த்து நான் லவ் பண்ணல.. எனக்கு ஏன் அவர பிடிக்கும்னா.. 50 வயது எலான் மஸ்க்-ஐ காதலிக்கும் 27 வயது நடிகை

Tags : #KERALA #HUSBAND #DIVORCE #WIFE #PHONE CALL #கணவர் #மனைவி #நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala, a husband divorces his wife on the basis of phone calls | India News.