''இனி எட்டு பேருடன் வாட்ஸ்அப் குரூப் கால் செய்யலாம்...!'' 'வாட்ஸ் அப்பின்' அசத்தல் 'அப்டேட்...'

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Suriyaraj | Apr 24, 2020 10:46 AM

உலகம் முழுவதும் அதிக பயனர்களால் உபயோகப்படுத்தப்படும், வாட்ஸ்அப் செயலியில் குரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் எட்டு பேர் பங்கேற்கும் விதமாக புதிய வசதி தரப்பட்டுள்ளது.

whatsapp group audio and video calls allow adding 8 people

வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே உரையாட முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில், கொரோனாவால் வீடுகளில் முடங்கிப் போனவர்கள் அதிகம் பேருடன் தொடர்பு கொள்ளும் விதமாக இந்த எண்ணிக்கையை வாட்ஸ்அப் அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய வசதி, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா  இயங்கு தளங்களில் உபயோகிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் வாட்ஸ்அப் குரூப் சென்று உரையாட வேண்டியவர்களை தேர்வு செய்து அழைப்பை மேற்கொள்ளலாம். இதுதவிர, பயனர்கள் கால்ஸ் டேப் சென்று பேச விரும்புவோரை தனித்தனியாக தேர்வு செய்து குரூப் கால் செய்யலாம்.