‘கடந்த 24 மணிநேரத்தில்’... ‘இந்த 27 மாவட்டங்களிலும்’... ‘தமிழக சுகாதாரத் துறையின் தகவல்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27 மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர்கூட பாதிக்கவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், ஒரே நாளில் ஆயிரத்து 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மாநிலம் முழுவதும் 76 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணிநேரத்தில் 27 மாவட்டங்களில் புதியதாக ஒருவருக்கு கூட நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை, தென்காசி, விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சை, கள்ளக்குறிச்சி, கோவை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களை தவிர மீதமுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று புதியதாக ஏற்படவில்லை. சென்னையை பொறுத்தவரை, மாவட்ட அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
Tags : #HEALTH #DEPARTMENT #DISTRICT #LIST #UPDATE
