'மது' அருந்துவது 'கொரோனா' தொற்றை தடுக்குமா?... உலக 'சுகாதார' அமைப்பு விளக்கம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தொடர்பாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. என்னென்ன வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகின என்றும் அவற்றில் உண்மை உள்ளதா? என்பதையும் இங்கே பார்க்கலாம்.
![Alcohol prevent from Coronavirus?, World Health Organization Clarifies Alcohol prevent from Coronavirus?, World Health Organization Clarifies](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/alcohol-prevent-from-coronavirus-world-health-organization-clarifies.jpg)
1. ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒருமுறை தண்ணீர் குடித்தால் கொரோனா தொற்றுநோயை தடுத்து விடலாம்.
இதற்கு இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அளித்த பதிலில் இதில் எந்தவிதமான அறிவியல் உண்மையும் கிடையாது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க குடிநீர் உதவாது என உலக சுகாதார அமைப்பும் தெரிவித்து இருக்கிறது.
2. புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் வாழ முடியுமா?
ஆம், கொரோனா (2019-nCoV) வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை மற்றும் குளிர் மற்றும் வறண்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.
3. குடிநீர் தொண்டை புண் போக்குமா, இது கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்குமா?
ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு குடிநீர் முக்கியம் என்றாலும், இது கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்காது.
ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த கருத்து பிலிப்பைன்ஸில் பரவலாக பகிரப்பட்டது. இது ஜப்பானில் மருத்துவர்கள் வழங்கிய சுகாதார ஆலோசனையாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
4. மது அருந்தினால் புதிய கொரோனா வைரஸை (2019-nCoV) தடுக்குமா?
இல்லை. மது அருந்துவது கொரோனா நோய்த்தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்காது.
இவ்வாறு மேற்கண்ட வதந்திகளுக்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மையல்ல என்பதை மனதில் கொண்டு, இதுபோன்ற வதந்திகளில் கவனம் செலுத்தாமல் அதிகாரப்பூர்வ தளங்களை நாடி கொரோனா குறித்த மருத்துவ உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
அல்லது உங்களது பகுதியில் இருக்கும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் கூற்றை கடைப்பிடித்து கொரோனா தொற்றில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள்!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)