'வாய்ஸ்' காலுக்கு 67%.. 'டேட்டா'வுக்கு 20% 'கட்டண' உயர்வு.. இனி 'பாத்து' தான் செலவு பண்ணனும்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Nov 22, 2019 05:47 PM

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளன. இதற்கு இடையில் ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள் தங்களுக்கு செலுத்த வேண்டிய 42 ஆயிரம் கோடியை செலுத்துவதற்கு, மத்திய அரசு 2 ஆண்டுகள் வரை அவகாசம் அளித்துள்ளது.

voice call rates may soon rise 67%, data to get 20% details here

இதனால் ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் கட்டண உயர்வை கைவிடுமா? என்ற எண்ணம் வாடிக்கையாளர்கள் மனதில் தோன்ற ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் வாய்ஸ் கால்களுக்கு 67% கட்டணமும், டேட்டாவுக்கு 20% கட்டணமும் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் இனி மலிவான இலவச அழைப்புகளுக்கும் டேட்டாக்களுக்கும் முடிவு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. டிராய் மதிப்பீட்டின்படி கடந்த 2015-ம் ஆண்டு 226 ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது. ஜியோவின் வருகையால் டேட்டாவின் விலை சந்தையில் மிகவும் குறைந்துள்ளது.

கட்டண உயர்வுகள் அமலுக்கு வரும்போது டிராய் வாய்ஸ் கால்களுக்கு 1 நிமிடத்திற்கு 10 பைசா என்றளவில் நிர்ணயிக்கலாம் என கூறப்படுகிறது. இது ஐயுசி கட்டணத்தை விட 67% அதிகம் ஆகும். இதேபோல டேட்டா தரவுகள் 1 ஜிபிக்கு 3 ரூபாய் என்றளவில் விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இது முந்தைய விலைகளை ஒப்பிடும்போது 20% வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல குறைந்த விலை ரீசார்ஜ்களின் கட்டணம் 40% அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஸ்மார்ட் ரீசார்ஜ் என அழைக்கப்படும் ஏர்டெல்லின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் 23 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் செல்லுபடியை 28 நாட்களுக்கு நீடித்து வழங்கி வருகிறது.வோடபோனிலும் இந்த கட்டணம் 24 ரூபாயாயாக உள்ளது. ஆனால் ஜியோவில் இந்த கட்டணம் 59 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #JIO