'கூல்ட்ரிங்க்ஸ்' ஒழுங்கா கொடுக்கல போல.. ரசிகர்கள் கிண்டல்.. 'பதிலளித்த' சஞ்சு சாம்சன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 22, 2019 04:37 PM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த அறிவிப்பை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் தோனி, அஸ்வின், பும்ரா, சஞ்சு சாம்சன் ஆகியோரது பெயர் இடம் பெறவில்லை. பும்ரா சிகிச்சையில் இருப்பதால் அவரை பிசிசிஐ தேர்வு செய்யவில்லை.

Cricket Fans Try to Decode Sanju Samson\'s Cryptic Tweet

அஸ்வின் வங்கதேச டீமில் இடம் பெற்றார். அப்படி பார்த்தால் தோனி, சஞ்சு சாம்சனை ஏன் தொடர்ந்து பிசிசிஐ ஒதுக்குகிறது என ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளித்து வருகின்றனர். குறிப்பாக இளம்வீரர் சஞ்சு சாம்சனை ஏன் தொடர்ந்து ஓரம் கட்டுகின்றனர் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கிரிக்கெட் விமர்சகர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் ஆகியோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சஞ்சு சாம்சனை கடந்த முறை டீமில் எடுத்து அவருக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வரும் பணியை அளித்தனர். அதில் அவர் சிறப்பாக செய்லபடவில்லை என்பதால் அவருக்கு இந்தமுறை வாய்ப்பு ஏதும் அளிக்கவில்லை என்று கிண்டல் செய்துள்ளனர். மேலும் நீங்கள் அவரது பேட்டிங்கை சோதனை செய்கிறீர்களா? இல்லை அவரது மனதையா? என்றும் கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.

இந்தநிலையில் சஞ்சு சாம்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிரிப்பது போன்ற ஸ்மைலி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த நிலையிலும் உங்கள் வலியை மறைத்துக்கொண்டு சிரிக்கிறீர்கள். கண்டிப்பாக உங்களுக்கு நல்ல காலம் வரும் காத்திருங்கள் என அவருக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை ஆறுதல் அளித்து வருகின்றனர்.