இனிமே இது 'இலவசம்'... எந்த 'கட்டணமும்' வசூலிக்கப்படாது... அதிரடியாக அறிவித்த டிராய்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Feb 21, 2020 02:27 AM

வாட்ஸ் ஆப்பின் வருகையால் எஸ்எம்எஸ்களை பயன்படுத்துவது வெகுவாக குறைந்து விட்டது என்றாலும் ஓடிபி(OTP)  உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு எஸ்எம்எஸ் தான் பயன்படுத்தப்படுகிறது. எனினும் கால்களை இலவசமாக வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களுக்கு மேல் இலசவம் கிடையாது என தெரிவித்து விடுகின்றன. இதனை யாரும் பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில் தற்போது டிராய் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TRAI proposes to withdraw 50 paise charge on SMS beyond daily limit of

அதன்படி இனிமேல் 100 எஸ்எம்எஸ்கள் என்கிற வரம்பு தீர்ந்த பின்னர் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கும் 50 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்பட்ட மாட்டாது. நீங்கள் நாளொன்றுக்கு எவ்வளவு எஸ்எம்எஸ்கள் வேண்டும் என்றாலும் அனுப்பலாம். கடந்த நவம்பர் 2012 இல் தொல்லைதரும் எஸ்எம்எஸ்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தின் கீழ், டிராய் குறைந்தபட்சம் 50 பைசா என்கிற கட்டண வீதத்தை அறிவித்தது.

தற்போது டி.சி.சி.சி.பி.ஆர் 2018 (டெலிகாம் கமர்ஷியல் கம்யூனிகேஷன்ஸ் வாடிக்கையாளர் விருப்பத்தேர்வுகள்) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், எஸ்.எம்.எஸ்களுக்கான கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று டிராய் உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தொலைத்தொடர்பு கட்டண (65 வது திருத்தம்) ஆணை, 2020 தொலைத்தொடர்பு கட்டண (54 வது திருத்தம்) ஆணை அறிமுகப்படுத்திய ''எஸ்எம்எஸ் கட்டணத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் திரும்பப் பெறப்படுகிறது" என்று டிராய் தொலைத்தொடர்பு கட்டண கூறியுள்ளது.

இந்த வரைவு குறித்த பங்குதாரர்களின் கருத்துகளுக்கான காலக்கெடுவாக மார்ச் 3-ம் தேதியும், எதிர் கருத்துகளுக்களான காலக்கெடுவாக மார்ச் 17-ம் தேதியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்குப்பிறகு இந்த எஸ்எம்எஸ் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.