‘ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள பிரபல நிறுவனம்’.. ‘அதிரடி அறிவிப்பால் உற்சாகத்தில் பயனாளர்கள்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 16, 2019 07:25 PM

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் சலுகைக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிராட்பேண்ட் பயனாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

BSNL Bharat Fiber Rs777 Broadband Plan Reintroduced

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.777 சலுகையை மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் மாதம் 500 ஜி.பி. டேட்டா 50 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி அளவைக் கடந்ததும் இந்த வேகம் 20 Mbps ஆக குறைக்கப்படுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு நீக்கப்பட்ட இந்த ரூ.777 சலுகை தற்போது மீண்டும் விளம்பர நோக்கில் வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தின் இந்த சேவை பயனாளர்களுக்கு 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்பின் இந்த சேவைக்கு ரூ.849 செலுத்த வேண்டி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ரூ.846 சலுகையில் பயனாளர்களுக்கு 600 ஜி.பி. டேட்டா 50 Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.

Tags : #RELIANCE #JIO #BSNL #JIOFIBER #FIBER #OFFER