'ரிங் நேரத்தை குறைத்த ஜியோ'... 'ஏர்டெல் நிறுவனம் புகார்'!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Sangeetha | Sep 25, 2019 01:08 PM
செல்ஃபோன் அழைப்பின்போது ரிங் ஆகும் நேரத்தை, ஜியோ நிறுவனம் குறைத்து மோசடியில் ஈடுபட்டதாக ஏர்டெல் நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செல்ஃபோன் நெட்வொர்க் சேவைகளில் பல நிறுவனங்கள் இருப்பினும், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு இடையே எப்போதும் கடுமையான போட்டி இருக்கும். இந்நிலையில் ஜியோவின் ரிங் நேரம் மீது ஏர்டெல் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும், சாரசரியாக 45 நொடிகளுக்கு போன் ரிங்கிங் நேரத்தை வைத்திருக்கும் போது, ஜியோ நிறுவனம் மட்டும், வெறும் 20 நொடிகளில் ரிங் நேரத்தை நடைமுறையில் வைத்துள்ளது. இதனால் அழைப்பை ஏற்கும் முன்னரே வாடிக்கையாளர்கள் மிஸ்டுகால் பெறுகின்றனர்.
இது செயற்கையாக அவுட்கோயிங் அழைப்புகள், இன்கம்மிங் அழைப்பாக மாற்றப்படுகிறது எனக் கூறியுள்ளது. பொதுவாக ஏர்டெல் நெட்வொர்கில் இருந்து ஒருவர், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தால், அது அவருக்கும் வெறும் 20 நொடிகள் மட்டுமே ரிங் ஆகும். இந்த குறைவான நேரத்தில் 30 சதவிகிதம் பேருக்கு மிஸ்டுகால் பெறுவார்கள் எனவும், பின்பு மிஸ்டுகால்களைப் பார்த்த ஜியோ வாடிக்கையாளர்கள், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கால் செய்வார். இதன்மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு ஒரு அவுட்கோயிங் அழைப்பு, தற்போது இன்கம்மிங் அழைப்பாக மாறும்.
ஆனால் உண்மையான விதிகளின்படி இன்கம்மிங் அழைப்பு பெறும் நிறுவனம், எதிர் நிறுவனத்திற்கு ஐயுசி (iuc) கட்டணமாக 6 பைசா கொடுக்க வேண்டும். இப்படி ஜியோ தளத்தில் பதிவாகும் 25 முதல் 30 சதவிகித மிஸ்டுகால்களில் மூலம் செய்யப்படும் அழைப்புகளால் 6 பைசா கட்டணத்தை ஜியோ பெறுகிறது. ஆனால் இதற்கு ஜியோ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறுகையில் 30 நொடிகள் தான் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் ஒன்று. உலகளவில் டெலிகாம் நிறுவனங்கள் 15-20 நொடிகளுக்குத் தான் ரிங் நேரத்தை வைக்கின்றன என தெரிவித்துள்ளது.