'விசா' வேணும்னா இனி 'முக்கியமான' இந்த விபரங்களையும் கொடுக்கணுமா?.. வெளியான தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jun 02, 2019 01:48 PM

விசாவுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு சமூக வலைதளங்களின் ஐடிக்களை ஒப்படைப்பதும் இனி கட்டாயம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

visa candidate should provide social media details for verification

வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு தற்காலிகமாகவோ, நீண்ட கால ஒப்பந்தத்தின் பேரிலோ தங்குபவர்களுக்கான முக்கிய ஆவணமாக விசா என்னும் ஆளறியும் ஆதாரம் அவசியமாகிறது. ஒரு நாட்டில் இருக்கும் நபர் இன்னொரு நாட்டிற்கு எதன் நிமித்தமாக, யாருடைய அழைப்பின் அல்லது உதவியின் பேரில் சென்றாலும், விசாவுக்குக் காத்திருப்பதும் உண்டு.

இவையெல்லாம் வெற்றிகரமாய் நடந்து முடிந்து, விசா வந்தால் பறந்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட ஒரு சில ஆதாரங்களுக்கான பரிசோதனைம், சரிபார்ப்பு ப்ரோசஸ்கள் முன்கூட்டியே நடந்தேறிவிடும். இவற்றுக்கு பாஸ்போர்ட் சேவா சங்கங்களால், விண்ணப்பதாரரின் தகுந்த ஆவணங்களை சரிபார்த்த பின்பு ஒப்புதல் வழங்கப்படும்.

இந்த நிலையில், இனி அமெரிக்கா செல்லுவதற்காக விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள், பேஸ்புக், ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட தங்களது கடைசி 5 ஆண்டுகால பயன்பாட்டில் உள்ள சமூக வலைதளங்களின் விபரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த செப்டம்பர் 2018 வரை, 8 லட்சத்து 72 ஆயிரம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள அமெரிக்க விசா அமைச்சகம், தற்போது இந்த புதிய விதிகளை உடனடியாக அமல்படுத்தலாம் என்று ஊர்ஜிதமாவதாக எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தியினை வெளியிட்டுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வமாக இந்த செயல்முறை இன்னும் அறிவிக்கப்படவோ  பின்பற்றப்படவோ இல்லை என தெரிகிறது.

Tags : #VISA #SOCIALMEDIA