'டீம்க்கு.. என்ன தேவையோ... அதத்தான் தோனி செஞ்சார்'... ஸ்லோ இன்னிங்ஸ் விமர்சனத்துக்கு.. 'சச்சின் பதில்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jul 03, 2019 09:57 PM
இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. முந்தைய போட்டிகளைப் போலவே இந்த போட்டிகளிலும் தோனியின் இன்னிங்ஸ் குறித்த விமர்சனங்கள் எழுந்தன. முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தோனியின் பேட்டிங் பற்றி செய்த விமர்சனம் சர்ச்சையை எழுப்பியது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சேஸிங் செய்த இந்திய அணி, முதல் 10 ஓவர்களில் வீணடித்த டாட் பந்துகள் குறித்து விமர்சனம் செய்யாதவர்கள் தோனியின் இன்னிங்ஸ் பற்றி விமர்சனம் செய்வதாக நெட்டிசன்கள் பலரும் பொங்கி எழுந்தனர்.
மொத்தமாக இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், ஆப்கான் அணிக்கு எதிராகவும், விளையாண்டபோது தோனியின் இன்னிங்ஸ் விமர்சிக்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோனி ஆடிய விதம் பற்றி சச்சின் டெண்டுல்கர் பாராட்டியே பேசியிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாண்ட போட்டியில் தோனியின் இன்னிங்ஸ் பற்றிய சில விமர்சனங்களும் எழுந்தன. அதாவது தோனி சிக்ஸர் அடிக்கவில்லை என்கிற அளவில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இது குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தோனி ஆடிய இன்னிங்ஸ் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் இந்திய அணிக்கு தேவையானது எதுவோ அதைத்தான் செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
