'பாலியல் உறவு' வச்சிக்கிட்டாலும் டெங்கு பரவும்'...'உறுதி செய்த மருத்துவர்கள்'...அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Nov 12, 2019 08:26 AM

கொசுக்கள் மூலமாக மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவும் என கருதப்பட்ட நிலையில், உடலுறவு மூலமாகவும் டெங்கு பரவும் என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

Man Acquires Dengue from Male Partner through Sexual Transmission

மழை காலம் ஆரம்பித்தாலே மக்களிடம் டெங்கு குறித்த அச்ச உணர்வு தொற்றி கொள்கிறது. இதன் பதிப்பின் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். டெங்கு வைரஸ் கொசுக்கள் மூலமாக மட்டுமே பரவும் என்ற கருத்து நிலவி வந்த நிலையில், அது வேறு விதமாகவும் பரவலாம் என்பதை நிரூபிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு வைரஸால் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் அவர் வசித்து வந்த இடம் டெங்கு கொசுவால் பாதிப்பு இல்லாத இடம் என்பதால், அவருக்கு டெங்கு எப்படி வந்தது என்பது மருத்துவர்களுக்கு புரியவில்லை.

டெங்கு பாதித்த இடம் வழியாக அவர் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அதனை மருத்துவ குழு நிராகரித்தது. இந்நிலையில் மருத்துவர்கள் நடத்திய விரிவான ஆய்வில், டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய ஆண் துணையுடன் அவர் பாலியல் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரது விந்து மாதிரிகளை எடுத்து சோதனை செய்யப்பட்டது. அப்போது  டெங்கு வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் அதில் இருந்தன.

இதையடுத்து , பாலியல் உறவு மூலமாகவும் டெங்கு பரவும் என்பதை உறுதி செய்து மாட்ரிட் பொது சுகாதாரத் துறையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நபரின் ஆண் துணை சமீபத்தில் கியூபா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது மூலம் அவருக்கு டெங்கு தாக்கியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறினார்கள்.

Tags : #DENGUE #SEXUALLY-TRANSMITTED #FEVER