2 நிமிஷ வேலைக்கு கட்டு கட்டா பணத்தை அள்ளி கொடுத்த ஹர்ஷா சாய்.. ஷாக் ஆகிப்போன இஸ்திரி கடைக்காரர்😍.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது கோட்டை தேய்த்துக் கொடுத்த தம்பதிக்கு ஹர்ஷா சாய் கட்டுக்கட்டாக பணத்தை அள்ளி கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாக பரவி வருகிறது.

Also Read | ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்த மனைவி.! கண்டித்தும் கேட்காததால் கணவர் செய்த பகீர் காரியம்..?
யூடியூப் வட்டாரத்தில் பிரபலமானவர் ஹர்ஷா சாய். விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர் பொறியியல் முடித்திருக்கிறார். யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பகிர்ந்து வரும் இவருடைய சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சாலை ஓரத்தில் ஒரு தம்பதி துணிகளை அயர்ன் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது, அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த ஹர்ஷா சாய் தனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கே செல்கிறார். அவர்களிடத்தில் தான் அணிந்திருந்த கோட்டை தேய்த்துக் கொடுக்குமாறு கூறுகிறார் சாய்.
அதனை தொடர்ந்து தனது கோட்டை அவர் கழற்றிக் கொடுக்க, கடையின் உரிமையாளர் அதனை கவனமாக அயர்ன் செய்கிறார். பின்னர் அதனை ஹர்ஷாவிற்கு அணிவிக்கிறார் அந்த கடையின் உரிமையாளர். இதன் பிறகு, கோட்டை தேய்த்ததற்காக இரண்டு பணக்கட்டுகளை எடுத்து அந்த தம்பதியிடம் நீட்டுகிறார் சாய்.
இதனை கண்ட தம்பதியினர் என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஆச்சர்யத்துடன் அவரை பார்க்கின்றனர். பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு சாய் வலியுறுத்த பின்னர் அந்த தம்பதி பெரும் மகிழ்ச்சியுடன் பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள். எங்கு எப்போது எடுக்கப்பட்டது என தெரியாத நிலையில், இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் அவருடைய ஈகை குணத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக, முதியவர் ஒருவருடைய சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்த சாய், அவருக்கு மிகப்பெரும் பணத்தை கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதுமட்டும் இன்றி, ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவிவரும் ஹர்ஷாவிற்கு இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
Also Read | ஆஸ்திரேலியாவில் கைதான தனுஷ்கா குணதிலகா.. இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட பரபர அறிக்கை..!

மற்ற செய்திகள்
