"GIRL FRIEND-அ டேட்டிங் கூட்டிட்டு போகணும்.. ஒரு 300 ரூ கிடைக்குமா"..? கிரிக்கெட் வீரரின் பதிவில் கமெண்ட் போட்ட நபர்.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்டே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா ட்விட்டர் வாசி ஒருவருக்கு பணம் அனுப்பிய விவகாரம் குறித்துதான் சோசியல் மீடியாவில் பேச்சாக இருக்கிறது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா அண்மை காலங்களில் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். சிரிப்பை வரவழைக்க கூடிய பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதி வருகிறார். இதனாலேயே இவரை பின்தொடரும் நெட்டிசன்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சாலை பாதுகாப்பு உலகத் தொடர் 2022 இன் (Road Safety World Series 2022) அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் அணிக்காக விளையாடும் சுரேஷ் ரெய்னா அட்டகாசமான கேட்சை பிடித்து அசத்தியிருந்தார். இதுகுறித்து அமித் மிஸ்ராவும் கமெண்ட் செய்திருந்தார்.
Road Safety World Series 2022
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை வைத்து இந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட எட்டு நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணி, தற்போது அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. முதல் அரை இறுதி போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் தான் சுரேஷ் ரெய்னா இந்த கேட்சை பிடித்திருந்தார்.
Bhai @imraina, can I borrow your Time Machine? It’s mesmerising to see you field like old times. 😇👍 https://t.co/5YIvJAKELW
— Amit Mishra (@MishiAmit) September 29, 2022
மிஸ்ரவின் ட்வீட்
இந்நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்து அமித் மிஸ்ரா,"உங்கள் டைம் மெஷினை நான் கடனாக பெற்றுக்கொள்ளவா? முன்பை போல் நீங்கள் ஃபீல்டிங் செய்வதை பார்ப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த பதிவில் ஒருவர் தன்னுடைய காதலியை டேட்டிங்கிற்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் அதற்கு 300 ரூபாய் தந்து உதவும்படியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அந்த கமெண்டில் தனது UPI ID யையும் குறிப்பிட்டிருந்தார் அவர்.
இதனையடுத்து, ஆச்சர்யம் அளிக்கும் வகையில் மிஸ்ரா அவருக்கு 500 ரூபாய் அனுப்பியதோடு, அதற்கான ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்திருக்கிறார். மேலும், அந்த பதிவில்,"அனுப்பிவிட்டேன். உங்களுடைய டேட்டிங் நன்றாக அமைய வாழ்த்துக்கள்" எனவும் மிஸ்ரா குறிப்பிட்டுளளார். இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
Done, all the best for your date. 😅 https://t.co/KuH7afgnF8 pic.twitter.com/nkwZM4FM2u
— Amit Mishra (@MishiAmit) September 29, 2022
Also Read | மணிக்கு 240 கிமீ வேகத்துல வீசிய புயல்.. சாலையில் சிக்கிய செய்தியாளர்.. போராடி மீண்ட திக் திக் வீடியோ..!

மற்ற செய்திகள்
