கல்யாணம் முடிஞ்ச 3-வது நாள் புதுமணப்பெண் செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன மாமனார்.. போலீஸில் பரபரப்பு புகார்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணமான 3-வது நாள் புதுமணப்பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது 28 வயதான மகனுக்கு பெண் தேடியுள்ளார். ஆனால் மகன் மாற்றுத்திறனாளியாக இருந்ததால் அவருக்கு பெண் கிடைக்கவில்லை. இந்த சூழலில் கம்லேஷ் என்ற தரகர் மூலமாக வந்த ஆஷா (வயது 28) என்ற பெண் தொழிலதிபரின் மகனை திருமணம் செய்ய சம்மதித்தார்.
அப்போது ஆஷா தான் ஒரு ஆதரவற்றவர் என்றும், தனக்கு மனிஷா என்ற அத்தை மட்டும் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய தொழிலதிபர் தனது மகனுக்கு ஆஷாவை திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்தவுடன் ஆஷாவின் அத்தை என கூறிய பெண் தொழிலதிபரிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். மேலும் தரகரான கம்லேஷும் கமிஷனாக ரூ.10 ஆயிரம் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த 3-வது நாள், வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் அணிந்து கொண்டு மார்க்கெட் செல்வதாக கூறிவிட்டு ஆஷா வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த தொழிலதிபர் ஆஷாவை தொடர்பு கொண்டார்.
அப்போது, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், பணத்திற்காக இந்த திருமணத்தை செய்ததாகவும் ஆஷா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதனை அடுத்து உடனடியாக மலாடு காவல் நிலையத்தில் தொழிலதிபர் புகார் கொடுத்துள்ளார். அதில், ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை ஆஷா, மனிஷா மற்றும் தரகர் கம்லேஷ் ஆகியோர் மோசடி செய்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடி கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
