"அது ரிஸ்க்கான விஷயம்".. மஸ்க்கையே அதிர வச்ச மாணவர்.. வெயிட் பண்ணி மஸ்க் எடுத்த முடிவு.. வைரல் ட்வீட்.!
முகப்பு > செய்திகள் > வணிகம்எலான் மஸ்க்கின் பிரைவேட் ஜெட் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் ஜாக் ஸ்வீனி எனும் மாணவர் குறித்து மஸ்க் போட்ட ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார்.
முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.
முன்னதாக அனைவரும் பேச்சு சுதந்திரத்தை பெறும் இடமாக ட்விட்டர் இருக்கும் என மஸ்க் அறிவித்திருந்தார். இதனை வலியுறுத்தும் விதமாக அவர் செய்திருக்கும் ட்வீட் பலரைது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த ட்வீட்டில்,"பேச்சு சுதந்திரத்திற்கு நான் முக்கியத்தும் அளிப்பவன். அதனாலேயே நேரடியான தனிப்பட்ட பாதுகாப்புக்கான ஆபத்து என்றாலும் எனது விமானத்தைப் பின்தொடரும் கணக்கைத் தடை செய்யவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஜாக் ஸ்வீனி என்னும் மாணவர் எலான் மஸ்க்கின் ஜெட் விமானத்தின் இயக்கம் குறித்த தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதாவது, மஸ்கின் பிரைவேட் ஜெட் தற்போது எங்கே இருக்கிறது? அடுத்து எங்கே செல்லும்? எந்த விமான நிலையத்தில் எத்தனை மணி நேரம் நிற்கும் என அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார் ஜாக்.
இந்த விஷயத்தை அறிந்த மஸ்க், இந்த தகவல்களை நீக்குமாறு ஜாக்கிற்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். ட்விட்டரில் இருந்து தன்னுடைய ஜெட் விமானம் குறித்த தகவல்களை நீக்க, 5000 அமெரிக்க டாலர்களை வழங்குவதாகவும் மஸ்க் தனது மெசேஜில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஜாக் வைத்த கோரிக்கை வேறுவிதமாக இருந்தது. எலான் மஸ்கிடம் 3 கோரிக்கைகளை வைத்திருந்தார் ஜாக். தனக்கு 50,000 டாலர்கள் வழங்கவேண்டும். அவரது நிறுவனத்தில் இன்டெர்ன்ஷிப் பயில வாய்ப்பு வழங்கவேண்டும் அல்லது டெஸ்லா காரை வழங்க வேண்டும் என டீல் பேசியிருந்தார் ஜாக்.
இதனிடையே, ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நிலையில், ஜாக்கின் கணக்கு முடக்கப்படுமென பேச்சுகள் எழுந்தன. ஆனால், அவரது கணக்கை தடை செய்யப்போவதில்லை என மஸ்க் அறிவித்திருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதனிடையே மஸ்க்கின் இந்த ட்வீட்டிற்கு ஜாக் நன்றியும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.