"21 லட்சம் மோசடி பத்தி தான் முதல்'ல விசாரிச்சுருக்காங்க.. ஆனா, அதுக்கப்புறமா தான்".. தோண்ட தோண்ட வந்த திடுக்கிடும் தகவல்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநங்கை ஒருவர் மீது எழுந்த புகாரும், பின்னர் விசாரணையில் தெரிய வந்த தகவலும் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சந்தைப்பேட்டையை அடுத்த கனகனந்தல் ஏன்னு பகுதியில் வசித்து வந்தவர் பபிதா ரோஸ் (வயது 30).
திருநங்கையான இவர், திருச்சி மாவட்டம், வளநாடு அருகேயுள்ள புதுப்பட்டி என்னும் பகுதியில் தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்று கட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், இதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்தக்காரரான முருகேசனிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை பண பரிவர்த்தனை மூலம் பெற்றுக் கொண்ட பபிதா ரோஸ், மொத்தமாக அவரிடம் இருந்து 21 லட்ச ரூபாய் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், தனக்கு சேர வேண்டிய மொத்தம் 21 லட்சம் ரூபாயை பபிதாவிடம் முருகேசன் கேட்டுள்ளார். அப்போது, அவரை மிரட்டிய பபிதா, பணம் தர முடியாது என மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட முருகேசன், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
அதே வேளையில், பபிதா ரோஸ் வீட்டில் தச்சு வேலை செய்த நபர் ஒருவரும், தனக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை தராமல் மிரட்டல் விடுத்து வருவதாகவும் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பபிதா ரோஸ் மீது எழுந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தொடர்ந்து, பபிதாவை தேடி வந்த போலீசார், சமீபத்தில் அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
தனது சகோதரர்கள் உயர் பதவியில் இருப்பதாகவும், தான் ஜாமீன் வாரிசு என்றும் பல்வேறு பொய்களை கூறி பலரையும் பபிதா ஏமாற்றி உள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. அதே போல, ஏராளமானோரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை அவர் மோசடி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, 8 பேரை திருமணம் செய்து பபிதா ஏமாற்றி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இப்படி பல பக்கங்களில் மோசடியில் ஈடுபட்டு வந்த பபிதாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர, வேறு சில மோசடி விஷயங்களும் தெரிய வரலாம் என்று கருதப்படுகிறது.
Also Read | "அதிர்ஷ்டமே மீன் வலைக்குள்ள வந்து சிக்கி இருக்கு".. மொத்தம் 35 கிலோ.. "மதிப்பே 35 கோடிக்கு மேல போகுமாம்"