குடும்பமா சேர்ந்து கொள்ளை.. "அடிச்ச பணத்துல 2 கோடி ரூபாய்க்கு வீடு.. கூடவே" அதிர வைத்த வாக்குமூலம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 60). இவரது மனைவி நாகம்மாள் (55). இந்த தம்பதியரின் மகன் பெயர் சத்யா. இவருக்கும், நந்தினி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

Also Read | Bank-ல நகை அடகு வெச்ச பணம்.. Safe-ஆ இருக்கும்னு ஸ்கூட்டில வெச்ச பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
சத்யா - நந்தினி தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராமு, நாகம்மாள், சத்யா மற்றும் நந்தினி ஆகிய நான்கு பேரும் திருடுவதையே முழு நேர தொழிலாகவும் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதிலும் குறிப்பாக, பெண்களின் நகைகளை திருடுவதில் இவர்கள் அதிக அனுபவம் கொண்டு இருந்தததாகவும் கூறப்படுகிறது. சத்யாவின் தாய் நாகம்மாள், திருச்சி, பாலக்காடு, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், சில முறை அவர் சிறைக்கு சென்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில், பெண் ஒருவரிடம் எட்டு பவுன் நகையும், கோவில் திருவிழா ஒன்றில் 3 பேரிடம் 12 பவுன் நகை பறித்தது தொடர்பாகவும், ராமு, நாகம்மாள், சத்யா உள்ளிட்டோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அப்போது, இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது.
பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில், இவர்களுக்கு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் பங்களா ஒன்று இருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து 20 பவுன் நகை, ஒரு கார் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். முன்னதாக, தாங்கள் திருடும் நகைகளை உருக்கி விற்பனை செய்து வந்ததையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
கைதான பின்னர், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, கொள்ளையடித்த பணத்தில், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு உல்லாச சுற்றுலா சென்று ஒரு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததையும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் கொள்ளையடிக்கும் நகை மற்றும் பணத்தினால், 2 கோடிக்கு வீடு மட்டும் கட்டியதுடன் இல்லாமல், வெளிநாட்டில் சொகுசு சுற்றுலாவுக்கும் ஒரு குடும்பம் சென்று வந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Also Read | டாட்டூவுக்கு மட்டும் ₹1.9 கோடி செலவு.. "ஆனா அதுக்கு அப்றம்" .. மாடல் அழகியின் பரிதாப நிலை.!

மற்ற செய்திகள்
