'இளம் பெண்ணின் புகைப்படத்தை.. மார்ஃபிங் செய்து'.. 'அடுத்தடுத்து' இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இளம் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மிட்டாளம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மகன் அஜித். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை கடத்திச் சென்ற வழக்கில் கடந்த மாதம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த இவர் மீண்டும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு இளம் பெண்ணின் செல்போனுக்கு படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதுடன், அப்பெண்ணின் புகைப்படத்தை தன்னோடு இணைத்து மார்ஃபிங் செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இதனை தட்டிக்கேட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு அஜித் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து, கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின்பேரில் அஜித் உமராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டு, போக்சோ மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மற்ற செய்திகள்
