'ரோப் இல்ல.. டூப் இல்ல!'.. காலில் துப்பட்டா கட்டிக்கொண்டு அஞ்சான் நடிகை செய்த 'அசகாய' சாகசம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 11, 2020 02:02 PM

தென்னை மரத்தில் ஏறுவதற்கு நாயகர்களே டூப் மற்றும் ரோப்களை நம்பியிருக்கும் நிலையில் நடிகை ஒருவர் நிஜத்தில் துப்பட்டாவை காலில் மாட்டிக்கொண்டு தென்னை மரத்தில் ஏறி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

anjaan Movie actress tree climbing without rope goes viral

அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சஞ்சனா சிங் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் உள்ள நடிகைகளில் குறிப்பிடத்தக்க ஒருவரான இவர்,  நாயகர்களே வியந்து போகுமளவுக்கு சேலத்தில் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார்.

சேலம் நண்பர்களுடன் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சனா துப்பட்டாவை காலில் மாட்டிக் கொண்டு அங்கிருந்த தென்னை மரம் ஒன்றில் அநாயசமாக ஏறியுள்ளார்.  தென்னை மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கொஞ்சம் கூட நடுக்கமே இல்லாமல் அவர் ஏறிய விதம், மரம் ஏறுவதில் அவருக்கு இருந்த பயிற்சியை சுட்டிக்காட்டியது.

anjaan Movie actress tree climbing without rope goes viral

தென்னை மரத்தின் உச்சி வரை சென்று இறங்கிய சஞ்சனா இருபது வருடங்களுக்கு முன்பு தென்னை மரத்தில் ஏறிய அனுபவம் இருந்ததாகவும் அந்த நம்பிக்கையில்தான் மேலே ஏறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anjaan Movie actress tree climbing without rope goes viral | Tamil Nadu News.