‘மாணவிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து இளைஞர்கள் செய்த காரியம்..’ வீடியோ எடுத்து மிரட்டல்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 28, 2019 12:45 PM

பேருந்துக்காகக் காத்திருந்த 17 வயது மாணவியைக் கடத்தி இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two Men Force Teen To Drink Spiked Juice Rape Her In Rajasthan

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள நைன்வா என்னும் பகுதியில் சனிக்கிழமை மாலை 17 வயது பெண் ஒருவர் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அவருடைய ஊரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அங்கே வந்து அவரிடம் பேசியுள்ளனர். குளிர்பானம் ஒன்றைக் கொடுத்துக் குடிக்கச் சொல்லியுள்ளனர். அந்தப் பெண் வேண்டாமென மறுத்தும் அவரைக் கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்துள்ளனர்.

அதைக் குடித்த சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயக்கமடைந்துள்ளார். பிறகு ஆள் இல்லாத இடத்திற்கு அவரைத் தூக்கிச் சென்ற இளைஞர்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்து, இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் இந்த வீடியோவைப் பரப்பிவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதை அந்தப் பெண் வீட்டில் சொல்ல, அவருடைய பெற்றோர் இதுபற்றிக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கடத்தல், பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #SPIKEDJUICE #TEENGIRL #VIDEO #RAJASTHAN